1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 24 மார்ச் 2022 (18:03 IST)

கறிவேப்பிலை இட்லி பொடி செய்ய !!

தேவையான பொருட்கள்:

கறிவேப்பிலை - 2 கப்
மிளகு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
புளி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி விதை - 1 டீஸ்பூன்



செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு காயவைக்க வேண்டும். பிறகு அதில் மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு, புளி, கொத்தமல்லி விதை போட்டு நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பினை அணைத்து விட்டு அந்த சூட்டிலேயே கறிவேப்பிலையை வாணலியில் போட்டு லேசாகப் பிரட்டி விடவேண்டும். அத்துடன் பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.

இப்போது சூப்பரான கறிவேப்பிலை இட்லி பொடி தயார். இதை காற்று புகாத கண்ணாடி டப்பாவில் போட்டு வைத்து பயன்படுத்தலாம்.