வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

வீட்டில் உள்ள எளிய பொருட்களை வைத்து வறட்டு இருமலை குணமாக்க...!

வறட்டு இருமல் வருவதற்கு காரணம் வைரஸ். இது ஒரு வைரஸ் தொற்றுவால் ஏற்படுகிறது. இது அதிகமாக குழந்தைகளை பாதிக்கிறது. இந்த தொற்றினால்  பாதிக்கப்பட்டவர்கள் சற்று அதிக சத்தத்துடன் இருமுவார்கள். இருமும் பொழுது தொண்டையில் எரிச்சல் அதிகமாக ஏற்படும். குறிப்பாக படுத்தவுடன் இருமல்  அதிகமாக ஏற்படும். தொண்டை கட்டினாற்போல் பேசுவார்கள். வறட்டு இருமலை வீட்டில் உள்ள எளிய பொருட்களை கொண்டு விரட்டலாம். 
வறட்டு இருமல் வர முக்கியமான காரணமாக கருதப்படுவது தூசு மற்றும் புகை. புகை பிடிப்பவகளை மட்டுமின்றி அவர்கள் அருகில் இருப்பவர்களையும் இது பாதிக்கிறது. அசுத்தமான தண்ணீரினால் கூட இந்த நோய் ஏற்படலாம். சிலருக்கு விலங்குகளின் முடியினாலும் வறட்டு இருமல் ஏற்படலாம். சினிமா  தியேட்டரில் விற்கும் நாள்பட்ட ஐஸ்கிரீம் சாப்பிட்டாலும் வறட்டு இருமல் வரும்.
 
கொள்ளுப்பயிறு 50கிராம் எடுத்து வறுத்து பொடி செய்து கொண்டு அதனுடன் மிளகு, சுக்கு, பூண்டு ஆகியவற்றையும் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும்.  பிறகு வாணலியில் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு இந்த கலவையை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதனை இரண்டு நாட்கள், நாளுக்கு இரு வேளை குடித்தாலே போதும் வறட்டு இருமல் மட்டுமின்றி எந்த விதமான இருமலும் காணாமல் போகும்.
 
இளஞ்சூடான நீரில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் சிறிது எழுமிச்சை சாறு கலந்து அருந்தினால் வறட்டு இருமல் மற்றும் அதன் காரணமான சளியும் காணாமல்  போகும்.
 
இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி அதனை ஒரு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்க வேண்டும். இதனை வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் விட்டு கலக்கி, இந்த கலவையை ஒரு நாளைக்கு மூன்று வேளை பருகி வர வறட்டு இருமல் குணமாகும்.
 
சளிக்கும் இருமலுக்கும் தூதுவளை மிக அருமையான மருந்து. ஒரு சிட்டிகை தூதுவளை பொடியுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து கொடுத்து வர வறட்டு இருமல்  குணமாகும். இருமல் மட்டுமல்லாமல் சளியும் குணமாகும்.