வியாழன், 2 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு உடல் பருமனை குறைக்க டிப்ஸ்...!!

உடற் பருமன் மற்றும் அதிக கொழுப்பு ஆகியவற்றால் உயர் ரத்த அழுத்தம், உடலின் கெட்ட கொழுப்பு அதிகரித்தல், மூட்டு வியாதிகள் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை வர வாய்ப்பிருக்கிறது. எனவே சில வீட்டு மருத்துவத்தை பயன்படுத்தி அதன் பாதிப்புகளிலிருந்து விடுப்டலாம்.
1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து  எடுத்துக் கொண்டு வந்தால் உடல் எடை குறையும்.
 
தினமும் காலையில் ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறு சிறிதளவு தேன் கலந்து குடித்து வரவும்.
 
காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும். ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச் செய்தால் உடல் எடை கண்டிப்பாக குறையும்.
 
தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10 கறிவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும். 3 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.
 
தினமும் காலையில் எழுந்ததும் எலுமிச்சம் பழத்தை மிதமான வெந்நீரில் பிழிந்து குடிப்பது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைய உதவும். நோய் எதிர்ப்புச்  சக்தியும் மேம்படும். 
 
சிக்கன் 65, போண்டா, பஜ்ஜி போன்ற எண்ணெயில் பொறித்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எண்ணெய் உணவுகள்தான் உடல் பருமனுக்கு முக்கியக்  காரணம். 
 
வீட்டிலேயே உடற்பயிற்சிகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வரலாம். இது உடல் எடை குறைய மிகவும் உதவியாக இருக்கும்.
 
தினமும் எட்டு டம்ளர் தண்ணீர் அருந்துவது உடலை ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியோடும் வைத்திருக்க உதவும். உடலில் நீரிழப்பு ஏற்படாமல்  பார்த்துக்கொள்ளவும் முடியும். 
 
5 பூண்டு பற்களை ஒரு டம்ளர் பாலில் போட்டு பாதியாக சுண்டும் வரை கொதிக்க வைத்து இறக்கி, பாலுடன் பூண்டை சாப்பிட வேண்டும். இதனால் பூண்டு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றும்.