Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உருளைக்கிழங்கு சாற்றை பயன்படுத்தி அடர்த்தியான கூந்தலை பெறுவதற்கான குறிப்புகள்...!!

Written By Sasikala
Updated: சனி, 8 பிப்ரவரி 2020 (12:42 IST)
 
உருளைக்கிழங்கு சாறு முடி வளர்ச்சியை தூண்ட கூடியது. முடி வளர்ச்சிக்கு இது சிறந்த தீர்வு. சருமம் மற்றும் கூந்தலின் வளர்ச்சிக்கு கொலாஜன் மிகவும் தேவையான ஒன்று. உருளைக்கிழங்கில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.
 
உருளைக்கிழங்கு சாறு எடுத்து ஸ்கால்பில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் கூந்தல் வளர்ச்சியடையும். கூந்தலில் அதிகபடியான எண்ணெய்  இருந்தாலும் கூந்தல் உடையும். உருளைக்கிழங்கில் அதிகபடியான ஸ்டார்ச் இருப்பதால் கூந்தல் மற்றும் ஸ்கால்பிற்கு மிகவும் நல்லது.
 
கூந்தலின் அடர்த்தி குறைந்துவிட்டால், உருளைக்கிழங்கு சாறு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து ஸ்கால்பில் தடவி வந்தால் வறட்சி  நீங்கிவிடும். முடி உதிர்வு பிரச்சனை இருந்தால் மயிர்கால்களில் படும்படி உருளைக்கிழங்கு சாற்றை தடவி வரலாம்.
 
உருளைக்கிழங்கு சாறு எடுத்து ஸ்காப்பில் 15 நிமிடங்கள் வரை நன்கு மசாஜ் செய்தால் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியை தூண்டும். கூந்தலில் தடவி ஊறியபின் வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை அலச வேண்டும். மாதம் மூன்று முறை இப்படி செய்து வந்தால்  முடி உதிர்வு நின்றுவிடும்.
 
தயாரிப்பு முறை:
 
உருளைக்கிழங்கை நன்கு கழுவி, அதன் தோலை நீக்கி துருவி, பின்பு துருவிய உருளைக்கிழங்கை கையால் நன்கு பிழிந்து சாறு எடுத்து கொள்ளவும். உருளைக்கிழங்கை நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். ஒரு மெல்லிசான துணியால் அரைத்து வைத்தவற்றை  வடிகட்டி சாறு எடுத்து ஸ்கால்பில் தடவி கொள்ளவும். தொடர்ச்சியாக இப்படி செய்து வந்தால் முடி அடர்த்தியாக வளரும்.

எல்லாம் காட்டு

உடல் உறுப்பை பாதிக்கும் 7 கெட்ட பழக்கங்கள்!.. உடனே நிறுத்துங்க!...

உடல் எடை குறையாமல் இருக்க காரணம் என்ன?.. வாங்க பார்ப்போம்!..

மீண்டும் சூடுபடுத்தக் கூடாத உணவுகள்!.. வாங்க பார்ப்போம்..

சாப்பிட்டா நோயே வராது!.. சிறு தானியங்களின் பெரு நன்மைகள்!..

உணவு சாப்பிட்டவுடன் என்னவெல்லாம் செய்யக்கூடாது!.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments