Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் காய்கறிகள் !!

Written By Sasikala
Updated: வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (10:51 IST)

பீர்க்கங்காயில் இருக்கும் பெப்டைட்ஸ், ஆல்கலாப்ட்ஸ், சோன்டின் போன்ற வேதிப்பொருட்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகின்றன.
 
பீன்ஸ் வகைகளில் அதிக அளவு நார்ச்சத்து, புரோட்டீன், பொட்டாசியம், மக்னீசியம் நிறைந்துள்ளன. இவை, உடலுக்குத் தேவையான ஆற்றலை அளித்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன. இது, செரிமானத்தை சீராக்கி, ரத்தத்தைச் சுத்திகரிக்கிறது. இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.
 
காலி ஃப்ளவரில் பைட்டோகெமிக்கல் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் நமக்கு ஏரளமான நன்மைகளை செய்திடுகிறது. இதனால் இதயம் தொடர்பான பிரச்சனைகள்  மற்றும் ரத்தச் சர்க்கரையளவு கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
 
வெண்டைக்காய் அடிக்கடி உங்களது உணவுப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றைத் தாண்டி வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீரை குடிப்பது  மிகவும்  சிறந்தது.

முதல் நாள் இரவிலேயே வெண்டைக்காயை கட் செய்து தண்ணீரில் ஊறவைத்திட வேண்டும். பின்னர் மறுநாள் காலை அந்த தண்ணீரை வடிக்கட்டி  காலையில் குடித்து வர சர்க்கரை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
 
பாகற்காயில் அதிகளவு பீட்டா கரோட்டீன் இருக்கிறது. இவை தான் நம் உடலில் விட்டமின் ஏவாக சேகரிக்கப்படுகிறது. இதைத் தாண்டி இதில் கால்சியம்,  பொட்டாசியம்,வைட்டமின் பி1, பி2, பி3, சி, மக்னீசியம், ஃபோலேட், சிங்க், பாஸ்பரஸ், மாங்கனீஸ், நார்ச்சத்து ஆகியவை உண்டு. இவை ரத்தத்தில் இருக்கக்கூடிய அதிகளவு சர்க்கரையை குறைத்து கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவி செய்யும்.

எல்லாம் காட்டு

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

உடல் உறுப்பை பாதிக்கும் 7 கெட்ட பழக்கங்கள்!.. உடனே நிறுத்துங்க!...

அடுத்த கட்டுரையில்
Show comments