திங்கள், 2 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இந்த இயற்கை பானத்தால் பல நோய்களுக்கு கிடைக்கும் தீர்வு!

நமது உடலில் தங்கும் அன்றாடக் கழிவுகளை உடலானது 90 சதவீதம்தான் வெளியேற்றுகிறது. மீதமுள்ள நச்சு, கழிவுகள்,  கொழுப்பு போன்றவை உடலிலேயே தங்கி கேடு விளைவிக்கிறது. அதனை வீட்டிலிருந்தபடியே ஒரே ஒரு மருந்தால் வெளியேற்ற முடியும்.

 
 
தேவையானவை:
 
வெந்தயம் - 250gm 
ஓமம் - 100gm 
கருஞ்சீரகம் - 50gm
 
செய்முறை: 
 
மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு  கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான  நீரில் உட்கொள்ள வேண்டும். இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது. 
 
கிடைக்கும் நன்மைகள்: 
 
தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும்  வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது. 
 
தேவையான கொழும்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது. இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள்  நீக்கப்படுகிறது. 
 
இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. இருதயம் சீராக இயங்குகிறது. கண் பார்வை  தெளிவடைகிறது.
 
சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீக்கப்படுகிறது. உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும், சுறுசுறுப்பும் உண்டாகிறது. நல்ல முடி  வளர்ச்சி உண்டாகிறது. 
 
எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது. ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள் வலுவடைகிறது. இந்த கலவையை 2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் தீரும்.