ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 7 மே 2022 (18:51 IST)

நோய் எதிர்ப்பு சக்திகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய உதவும் திரிபலா சூரணம் !!

Thiripala Suranam
திரிபலா சூரணம் நமது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும் நோய் தடுப்பு அரண்களைத் தாண்டி, உடலின் உள்ளே நுழையும் அனைத்து கிருமிகளையும் எதிர்த்துப் போராடும் “ஆன்டிபாடி” எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய உதவுகிறது.


சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகளை நீக்கி சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவுகிறது. சளி,சைனஸ் நோய்களை தீர்க்கும் மருந்தாகவும் இது செயல்படுகிறது.

சிலருக்கு சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் ஆகா நிலை உண்டாகிறது. இத்தகைய செரிமானக் கோளாறுகளை திரிபலா அற்புதமாக குணப்படுத்துகிறது. அதிலும் உணவுப்பாதையில், மலத்தினை வெளித்தள்ளும் குடலியக்கத்தை சீராக செயல்பட வைக்கிறது. மலச்சிக்கல் தீரவும், குடல்சுத்திகரிப்பானாகவும் திரிபலா சிறப்பாக செயல்படுகிறது.

வயிறு மற்றும் உடலில் பூச்சிகளும், நுண்கிருமிகளும் வளர்வதற்கு உதவாத நச்சு நிலையை உடலில் பேணுவதற்கு திரிபலா உதவுகிறது.

திரிபலா சூரணம் பல சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது இதை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பு திறனையும் பலப்படுத்துகிறது.

திரிபலா சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு மிக்க ஒரு மருந்தாக செயல்படுகிறது. உடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் பேணுவதில் பெரும் பொறுப்பு வகிப்பது “இன்சுலின்” ஆகும். திரிபலா நமது கணையத்தினைத் தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்து சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது.

உடலின் சருமத்தில் ஏற்பட கூடிய தொற்று நோய்கள், சொறி, சிரங்கு போன்றவற்றை சீக்கிரம் குணப்படுத்துவதில் திரிபலா சூரணம் சிறந்த பங்காற்றுகிறது.