1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 8 டிசம்பர் 2021 (17:33 IST)

இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்த ஆப்பிள் !!

ஆப்பிள் பழத்தில் உள்ள ‘வைட்டமின் சி’ சத்து இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.

ஆப்பிளைக் கொண்டு சுவையான பழரசங்களும், ஆப்பிள் சிடர் வினிகர் என்னும் பானமும் தயாரிக்கப்படுகின்றது. சிடர் வகை ஆப்பிள்கள், பெரும்பாலும் அதிக உவர்ப்புத்தன்மை கொண்டவை.
 
ஆப்பிளில் உள்ள மாலிக் அமிலம் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. குடல் பாதையில் உள்ள தேவையற்ற நுண்கிருமிகளை கொல்கிறது. 
 
உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆப்பிள் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். 
 
முகச்சுருக்கங்களை போக்க ஆப்பிள் ஒரு சிறந்த நிவாரணியாகும். ஆப்பிளை மையாக அரைத்து முகத்தில் தேய்த்துவந்தால், விரைவில் முகச்சுருக்கங்கள் நீங்கி சருமம் புதுப்பொலிவு பெறும்.
 
ஆப்பிள் பழமானது குடல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பலவித ஆபத்தான புற்று நோய்கள் நம்மை அண்ட விடாமல் தடுக்கிறது.
 
தினமும் தொடர்ந்து ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை விரைவில் விடுபடலாம். ஆப்பிளை நன்கு மென்று சாப்பிட்டால் வாய் மற்றும் தொண்டைப் பகுதிகளில் உள்ள நுண்கிருமிகள் அழிக்கிறது.