1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

சரும நிறத்தை பொலிவு பெறச்செய்யும் ஃபேஸ் பேக்குகள்.....!

அரிசி மாவு ஃபேஸ் பேக்: அரிசி மாவில் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் உட்பொருட்கள் உள்ளன. இவை சருமத்தை பிரகாசமாகவும், பொலிவோடும்,  மென்மையாக்கவும் செய்யும். பால் சரும செல்களுக்கு ஊட்டமளிப்பதோடு, வறட்சியடையாமல் தடுக்க உதவும்.
தேவையான பொருட்கள்: அரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூன், பால் -2-3 டேபிள் ஸ்பூன்.
 
செய்முறை: ஒரு பௌலில் அரிசி மாவு மற்றும் பால் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அந்த கலவையை முகத்தில் தடவி 20-30  நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், சரும  நிறத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
 
உருளைக்கிழங்கு ஃபேஸ் பேக்: உருளைக்கிழங்கில் ப்ளீச்சிங் செய்யக்கூடிய தன்மை உடையது. எனவே இதைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்கும்  போது, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பளிச்சென்று பொலிவோடு காணப்படும்.
தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 1.
 
செய்முறை: உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்து பின் அதை வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு பஞ்சுருண்டைப் பயன்படுத்தி, உருளைக்கிழங்கு சாற்றினை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பிறகு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
 
இப்படி தினமும் ஒருமுறை செய்து வர ஒரே வாரத்தில் நல்ல பலன் கிடைக்கும். முக்கியமாக இந்த செயலை செய்த பின், மாய்ஸ்சுரைசர் எதையேனும்  பயன்படுத்துங்கள். ஏனேனில் இச்செயலால் சருமம் வறட்சி அடைய வாய்ப்புள்ளது.