செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தக்காளியில் உள்ள சத்துக்களும் அதன் அற்புத பலன்களும் !!

தலைமுடி வளர்ச்சிக்குத் தேவையான பீட்டா கரோட்டின் தக்காளியில் அதிக அளவில் உள்ளது. இதனால் தக்காளியை எந்த அளவு எடுத்துக் கொள்கிறோமோ அந்த அளவு தலைமுடி வளர்ச்சியானது மேம்படும்.
 

தக்காளியானது வறட்சியான தோல் உடையவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். தொடர்ந்து உணவாக எடுத்துக் கொண்டாலோ, முகம், கை, கால்களில் வெளிப்புறமாக அப்ளை செய்தாலோ சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மேம்படும். 
 
தக்காளியானது பற்கள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றது. மேலும் இது புற்றுநோய்க்கு எதிரான இயற்கையான குணங்களைக்  கொண்டதாகவும் உள்ளது.
 
தக்காளியானது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கும் தன்மை கொண்டுள்ளது. சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்க  நினைப்பவர்கள் தக்காளியினை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
 
தக்காளி கண் பார்வையை மேம்படுத்த உதவுகின்றது. தக்காளியானது சிறுநீரக கற்கள் மற்றும் பித்தக்கற்களைச் சரி செய்வதில் முக்கிய பங்காற்றுகின்றது.
 
தக்காளியை ஊறுகாய், குழம்பு, பச்சடி, தொக்கு எனப் பல வகையாக சாப்பிட்டாலும், உடல் எடையினைக் குறைக்க நினைப்போர் தக்காளியைப் பச்சையாக எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். தக்காளியில் உள்ள நீர்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்பினைக் குறைப்பதாக உள்ளது.