வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

ஆரோக்கியம் நிறைந்த தேங்காய் எண்ணெய்யின் பயன்கள்...!

புரதம், மாவு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப்பொருள்கள், வைட்டமின் சி, அனைத்துவகை ‘பி’ காம்ப்ளக்ஸ் சத்துகள்,  நார்ச்சத்துகள் உள்ளிட்ட உடல் இயக்கத்துக்குத் தேவையான அனைத்து சத்துகளும் தேங்காயில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தேங்காயில் உள்ள ஃபேட்டி ஆசிட் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கக்கூடியது. உடல் எடையையும் குறைக்கிறது என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. குறிப்பாக தேங்காயில் அதிகம் இருப்பதால் அது உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கிறது.
 
தேங்காய்ப்பாலில் காரத்தன்மை உள்ளதால் அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப்புண்ணுக்கு தேங்காய்ப்பால் அருமையான மருந்தாகச் செயல்படுகிறது. தேங்காயை அரைத்து அதனுடன் நாட்டுச்சர்க்கரைச் சேர்த்துச் சாப்பிட்டால் ஆண்மைச் சக்தி அதிகரிப்பதோடு  வயிற்றுப்பூச்சிகள் நீங்கும்
 
சுத்தமான தேங்காய் எண்ணெய் புரதச்சத்து நிறைந்திருப்பதால், வாரம் ஒருநாள் தேங்காய் எண்ணெய்யை தலையில் தேய்த்து ஊற வைத்து  குளித்து வந்தால் பெண்களின் கூந்தல் வேர்க்கால்கள் பலமடைவதோடு, பொடுகுத்தொல்லை நீங்கும்.
 
கேரளத்துப் பெண்கள் தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய்யைப் பயன்படுத்துவதோடு அன்றாட சமையலிலும் தேங்காய் எண்ணெயைதான்  பயன்படுத்துகின்றனர்.
 
தேங்காய் எண்ணெய் சருமத்தை பாதுகாப்பதில் மிகச்சிறந்த பலனைத் தருகிறது. சரும வறட்சியை போக்குவதில் சிறந்த மாய்ஸரைசராக செயல்படுகிறது. இதில் உள்ள கொழுப்புச்சத்து சரும சுருக்கத்தை போக்குகிறது. இதனால் சருமத்திற்கு எவ்வித பக்கவிளைவும்  ஏற்படுவதில்லை. முகம் பொலிவுப் பெற உதவும்.
 
தேங்காய் எண்ணெயில் உள்ள பாக்டீரிய எதிர்ப்புப் பொருள் தோல் பூஞ்சை நோய்களை கட்டுப்படுத்துகிறது. உடலுக்கு மட்டுல்லாது குடலுக்கும் பாதுகாப்பு தருகிறது. ஜீரண சக்தியை சீராக்கி மலச்சிக்கலை நீக்குகிறது. 
 
அ‌திகமாக மே‌க்-அ‌ப் போடு‌ம் பெ‌ண்க‌ள், இர‌வி‌ல் மு‌க‌த்தை சு‌த்த‌ம் செ‌‌ய்து‌ வி‌ட்டு தே‌ங்கா‌ய் எ‌ண்ணெயை தட‌வி‌க் கொ‌ண்டு படு‌க்கலா‌ம். இதனா‌ல் சரும‌த்‌தி‌ற்கு ந‌ல்ல பொ‌லிவு ‌கிடை‌க்கு‌ம்.