முடக்கத்தான் கீரையின் அற்புத மருத்துவ பயன்கள் !!
மூட்டுகளில் இருக்கும் அதிகப்படியான யூரிக் அமிலம், பாஸ்பரஸ், சுண்ணாம்பு போன்றவை தான் மூட்டுகளில் வலியை ஏற்படுத்துகிறது.
இதனை கரைத்து சிறுநீரக வெளியேற்றினால் மூட்டுகளில் வலி குறையும். மூட்டுகளில் வலியை குறைக்க முடக்கத்தான் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
முடக்கத்தான் கீரையின் இலையை மைய அரைத்து கால் முட்டியில் வீக்கம் இருக்கும் இடத்தில் தேய்த்து வந்தால் வீக்கம் குறையும்.
மூட்டுகளில் இருக்கும் யூரிக் அமிலமும் படிப்படியாக குறைய தொடங்கும். மூட்டுகளில் வலி உணர்வு ஏற்பட்டால் தினமும் அருந்தும் டீ, காபி பானங்களை தவிர்த்து, ஒரு கப் முடக்கத்தான் சூப் குடிக்கலாம்.
முடக்கத்தான் இலையை நிழலில் காய வைத்து பொடி செய்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீரிலோ அல்லது தேனிலோ அரை டீஸ்பூன் இதை கலந்து குழைத்து, தொடர்ந்து ஒரு மண்டலம் அளவு இதை சாப்பிட்டு வந்தால் மூட்டுகளில் வலி குறையும்.
மூட்டுகளில் அதிகளவில் தங்கியிருக்கும் யூரிக் அமிலத்தை கரைத்து சிறுநீராக வெளியேற்றும். மூட்டுகளுக்கு நடுவில் உருவாகும் ஜெல்லின் உற்பத்தியை அதிகரித்து எலும்புகளை வலிமையாக்கும்.