உடல் எரிச்சலை நீக்கி குளிர்ச்சியை தரும் கரும்பு சாறு !!
அவ்வப்போது கரும்பு சாறு பருகி வந்தால் இதயத்திற்கு ஏற்படும் அழுத்தங்கள் நீங்கி, இதய பாதிப்பு, மாரடைப்பு போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கும்.
வெயில்காலங்களில் பலருக்கு உடல் உஷ்ணம் அதிகமாகி உடல் எரிச்சல் ஏற்படும். இவர்கள் கரும்பு சாறுடன் தயிர் சேர்த்து குடித்து வந்தால் உடல் எரிச்சல் நீங்கி, உடல் குளிர்ச்சி பெரும்.
கரும்பு சாற்றில் உள்ள பொட்டாசியம் வயிற்றின் அளவுகளை சமன்செய்ய உதவுகிறது, மற்றும் செரிமான சாறுகள் சுரக்கவும் உதவுகிறது.
கரும்பில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிம சத்துக்கள் உள்ளன. எனவே கரும்பு சாப்பிடுவதால் பற்கள் மற்றும் ஈறுகளுக்கு வலிமை அளிக்கிறது.
கரும்பு சாறு தீங்கு விளைவிக்கும் நச்சுகள் மற்றும் பிற தேவையில்லாத கூறுகளை நீக்கி, உடலை தூய்மைப்படுத்துவதில் உதவுகிறது. உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்குவதால் படிப்படியாக உங்கள் உடல் எடை குறைய வழிவகுக்கிறது.
கரும்பு, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமங்களை கொண்டிருக்கிறது, இது உங்கள் பற்களின் பற்சிப்பியை உருவாக்க உதவுகிறது.