Daily Horoscope
✕

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் நட்சத்திரப்பழம்...!!

Written By Sasikala
Updated: புதன், 7 அக்டோபர் 2020 (15:48 IST)

பிரசவித்த தாய்மார்களுக்கு இப்பழம் ஒரு வரபிரசாதமாகும். இப்பழம் இயற்கை ஹார்மோன் மாத்திரையாகச் செயல்பட்டு பால்சுரப்பிற்கான ஹார்மோனைத் தூண்டி  தாய்பாலை நன்கு சுரக்கச் செய்கிறது.
 
அஜீரணக் கோளாறால் வயிற்றில் வாயுவின் சீற்றம் அதிகமாகி மூலப் பகுதியைத் தாக்குகிறது. இதனால் மூலநோய் உண்டாகிறது. இந்த மூல நோயின் பாதிப்பிலிருந்து விடுபட நட்சத்திரப் பழத்தை இரவு உணவுக்குப் பின் இரண்டு துண்டுகள் சாப்பிட்டு வந்தால் மூல நோயின் தாக்கம் குறையும். 
 
மழைக் காலத்தில் சருமத்தில் சில பாதிப்புகள் ஏற்படும். ஸ்டார் பழம் சாப்பிட்டு வந்தால் சரும நோயின் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம். இப்பழத்தினை உண்ணும்போது சருமானது நீர்ச்சத்துடன் சுருக்கங்கள், பருக்கள் இன்றி பளபளப்பாக இருக்கும். 
 
இப்பழத்தில் உள்ள தாது உப்புக்கள் நரம்புகள் மற்றும் தசைகளின் செயல்பாடுகளை சீராக்கி உடலினை பலப்படுத்துகிறது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இப்பழத்தினை உண்டு நல்ல பலனைப் பெறலாம்.
 
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி ஸ்டார் பழத்திற்கு  உண்டு. 

எல்லாம் காட்டு

டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?!.. பொதுமக்கள் அலார்ட்!..

நள்ளிரவு உணவால் வரும் ஆபத்து!.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

இரவு நேரத்தில் (Night Shift) பணி புரிவதில் உடலில் ஏற்படும் பாதிப்பு!.. மக்களே அலார்ட்..

வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் பலன்கள்!.. வாங்க பார்ப்போம்!...

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

அடுத்த கட்டுரையில்
Show comments