திங்கள், 2 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

சில மூலிகை பொடிகளும் அதன் பயன்களும்....!

மூலிகைப் பொடிகளை நாட்டு மருந்து கடைகளில் வாங்கலாம். உடலில் ஏற்படும் கோளாறுகள் அனைத்தையும் மூலிகைப் பொடிகள் மூலம் சரி செய்யலாம். மேலும் மூலிகைப் பொடிகள் பல நன்மைகளை நமது உடலுக்கு தரவல்லது.
அருகம்புல் பொடி - அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி.
 
நெல்லிக்காய் பொடி – பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது
 
கடுக்காய் பொடி – குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
 
வில்வம் பொடி – அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது
 
அமுக்கரா பொடி – தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
சிறுகுறிஞான் பொடி – சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
 
நவால் பொடி – சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
 
வல்லாரை பொடி – நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
 
தூதுவளை பொடி – நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
 
துளசி பொடி – மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
 
ஆவரம்பூ பொடி – இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
 
கண்டங்கத்திரி பொடி – மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.
 
ரோஜாபூ பொடி – இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.