Daily Horoscope
✕

இத்தனை மருத்துவ குணங்களை கொண்டதா தொட்டால் சிணுங்கி...!!

Written By Sasikala
Updated: வியாழன், 17 டிசம்பர் 2020 (17:31 IST)

தண்ணீரில் தொட்டால் சிணுங்கி இலைகளை போட்டு வேக வையுங்கள். இந்த தண்ணீரை இடுப்பில் வைத்து ஒத்தடம் கொடுத்து வந்தால், இடுப்பு வலி விரைவில்  காணாமல் போய்விடும்.
 
தொட்டால் சிணுங்கியின் இலை மற்றும் வேரை காயவைத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள். இதை தினமும் 1 தேக்கரண்டி பாலில் சேர்த்து குடித்து வந்தால்,  சர்க்கரை நோய் காணாமல் போய்விடும்.
 
உடல் குளிர்ச்சியாக: தொட்டால் சிணுங்கி இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட உடல் குளிர்ச்சியாகும். சிறுநீர் எரிச்சல் குறைய: தொட்டால் சிணுங்கி இலையை அரைத்து 10 கிராம் எடுத்து, காலையில் தயிருடன் கலந்து சாப்பிட சிறுநீர் எரிச்சல் குறையும்.
 
வாத வீக்கம் குறைய: தொட்டால் சிணுங்கி இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கும் குறையும். தேமல் குறைய: தொட்டாற்சுருங்கி  இலைச்சாறை தேமல் மேல் பூசிவர தேமல் குறையும்.
 
வயிற்றுக்கடுப்பு: ஒரு கையளவு தொட்டாசிணுங்கி இலையை நன்றாக அரைத்து ஒரு குவளை தயிறுடன் கலந்து காலை உணவிற்கு முன் பருகவும்.
 
மூலச்சூடு குறைய: தொட்டால் சிணுங்கி வேரையும், இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து பசும்பாலில் கலந்து குடிக்க மூலச்சூடு  குறையும்.
 
மூல நோய் குறைய: தொட்டாற் சுருங்கி இலை, நொச்சி இலை, எட்டி மர விதை, படிகாரம், வேப்பெண்ணெய், ஆமணக்கு எண்ணெய், தேன் மெழுகு ஆகியவற்றை களிம்பு பதத்தில் அரைத்து மூலம் உள்ள பகுதியில் பூசி வந்தால் மூல முளை குறையும்.

எல்லாம் காட்டு

ஆண்களுக்கு கருத்தடை மாத்திரை - விஞ்ஞானிகள் தீவிரம்...

எந்த நோய்க்கு எந்த தண்ணீர் சிறந்தது? - வாங்க பார்ப்போம்..

தினமும் ஒரு பப்பாளி!.. உடலுக்கு ஏற்படும் நன்மைகள்!..

டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?!.. பொதுமக்கள் அலார்ட்!..

நள்ளிரவு உணவால் வரும் ஆபத்து!.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

அடுத்த கட்டுரையில்
Show comments