உடல் எடை குறைய இயற்கை முறையிலான எளிய குறிப்புகள்.....!!
காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெந்நீரில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் எடையும் குறையும், அதேபோல் தொப்பை குறைய ஆரம்பிக்கும்.
அதிகப்படியான உடல் எடையால், உடலில் பல நோய்களும் எளிதில் தாக்குகின்றன. ஆகவே பலர் தொப்பை மற்றும் உடல் எடையை குறைப்பதற்கு ஜிம், டயட் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். பெரும்பாலானோர் தொப்பை விரைவில் குறைய வேண்டுமென்று கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்வார்கள்.
ஒரு அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் நான்கு தேக்கரண்டி ஓமம் பொடியை சேர்த்து நன்றாக கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும். மறு நாள் காலை அந்த கலவையை வடிகட்டி வெறும் வயிற்றில் தொடர்ந்து பத்து நாட்கள் சாப்பிட்ட வேண்டும். அதன் பிறகு தொப்பை குறைய ஆரம்பிக்கும்.
விதை நிக்கிய நெல்லிக்காயை சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிசாறு கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொளுப்புகள் கரையும் இதனால் தொப்பை குறைய ஆரம்பிக்கும்.
கடுங்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி தினமும் காலை வெறும் வயிற்றில் தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் தொப்பை குறையும்.
எலுமிச்சை சாறை எடுத்து ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து காலை வெறும் வயிற்றில் தினமும் அருந்தி வர உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் வெளியெரும். உடல் எடை குறையும்.
வெள்ளேரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவ்வகை சாறு எடுத்து குடித்தாலும் உடல் எடை குறையும்.