Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொடுகை விரட்டும் எளிமையான இயற்கை வழிமுறைகள்!!

Written By Sasikala
Updated: வெள்ளி, 2 டிசம்பர் 2016 (16:29 IST)
 
5. முட்டை
 
இரண்டு முட்டைகளை எடுத்து நன்கு அடித்துக் கொள்ளுங்கள். அந்த கலவையை தலைச் சருமத்தில் தடவி, பின் ஒரு மணி நேரம் கழித்து முடியை அலசுங்கள். இந்த சிகிச்சை பொடுகை ஒழிக்க மட்டுமல்லாமல், முடி உதிர்வை கட்டுப்படுத்தவும் உதவும்.
 
6. எண்ணெய்
 
பொடுகை நீக்க பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தி, தலைச் சருமத்திற்கு மசாஜ் செய்யுங்கள். இரவு முழுவதும் நன்கு ஊற விட்டு, காலையில் எழுந்ததும், தலையை ஷாம்பு கொண்டு அலச வேண்டும்.
 
7 கற்றாழை
 
குளிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் கற்றாழை ஜெல்லை, தலைச் சருமத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் கழித்து ஒரு ஷாம்புவை கொண்டு தலையை அலசிக் கொள்ளவும்.
 
8. தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தல்
 
ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன், 5 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை கலந்து, அதை தலைச் சருமத்தில் தடவிக் கொள்ளுங்கள். 20 அல்லது 30 நிமிடங்கள் கழித்து, ஒரு நல்ல ஷாம்புவைக் கொண்டு தலையை கழுவிக் கொள்ளுங்கள்.
 
10. ஆப்பிள், ஆர்ஞ்ச் பழங்கள்
 
சமமான அளவைக் கொண்ட, ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழங்களை கொண்டு ஒரு பசையை தயாரித்துக் கொள்ளுங்கள். அதனை ஸ்கால்ப்பில் நன்றாக தடவிக் கொள்ளுங்கள். 20 அல்லது 30 நிமிடங்கள் கழித்து ஷாம்புவால் தலையை கழுவிக் கொள்ளுங்கள்.
 
11. வேப்பிலை
 
சில வேப்ப இலைகளை எடுத்து, அதை நன்கு பேஸ்ட் செய்து, அதனை அப்படியே தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து, வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் தலையை கழுவிக் கொள்ளுங்கள்.
 
12. துளசி மற்றும் நெல்லிக்காய்
 
துளசி மற்றும் நெல்லிக்காய் பொடிகளை தண்ணீரோடு கலந்து ஒரு பசையை தயாரித்துக் கொள்ளுங்கள். இந்த பசையை கொண்டு தலைச் சருமத்தில் நன்றாக மசாஜ் செய்யுங்கள். அரை மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். பின்னர் ஷாம்புவால் தலைமுடியை நன்றாக அலசுங்கள்.
 
13. பூண்டு
 
இரண்டு டீஸ்பூன் பூண்டு பொடியை, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறோடு கலந்து பேஸ்ட் செய்து, அதனை தலைச் சருமத்தில் தேய்த்து, 30-40 நிமிடங்கள் வரை ஊற வைத்து, பின்னர் ஷாம்புவைக் கொண்டு குளிர்ந்த நீரில் முடியை அலசுங்கள்.
 
14. வெங்காயத்தை பயன்படுத்தல்
 
சிறிது வெங்காய விழுதை தலையில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து, பின் தலையை நன்றாக கழுவி, இறுதியில் சிறிது எலுமிச்சை சாற்றை தலையில் தேய்த்து நீரில் அலசினால், வெங்காய வாடை தலையை விட்டு நீங்கும், அத்துடன் பொடுகும் நீங்கிவிடும்.
 

எல்லாம் காட்டு

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

உடல் உறுப்பை பாதிக்கும் 7 கெட்ட பழக்கங்கள்!.. உடனே நிறுத்துங்க!...

உடல் எடை குறையாமல் இருக்க காரணம் என்ன?.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments