வைட்டமின் ஈ சத்துக்கள் அதிகம் கொண்டுள்ள நல்லெண்ணெய் !!
சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க க்ரீம் வகைகளை பயன்படுத்துபவர்கள் இயற்கையில் கிடைக்கும் நல்லெண்ணெய்யை பயன்படுத்தலாம்.
நல்லெண்ணெய் வைட்டமின் ஈ அதிகம் கொண்டுள்ளது. இது சிறந்த ஆண்டி ஆக்ஸிடெண்ட் ஆக செயல்படுகிறது.
ஆக்ஸிஜனேற்றம் அதாவது சருமத்துக்கு இலவச தீவிரமான சேதத்தை எதிர்த்து போராடுகிறது. இதில் இருக்கும் ஆன் டி மைக்ரோபியல் பண்புகள் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை அழித்து அவை தீவிரமாகாமல் தடுக்கின்றன. இதனால் சருமத்தில் வீக்கம், சிவத்தம் மற்றும் அழற்சியை குறைக்க செய்கின்றன.
சருமத்துக்கு மென்மையான மற்றும் ஒளிரும் சருமத்தை அளிக்க செய்கிறது. நல்லெண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் சருமத்துக்கு கிடைக்கும் பயன்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.
நல்லெண்ணெய் சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை கட்டுப்படுத்த உதவுகிறது. முகப்பரு மற்றும் பருக்களால் வரும் வடுக்களை போக்க செய்கிறது.
1 டீஸ்பூன் நல்லெண்ணெய்யுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பஞ்சில் தொட்டு பருக்கள் இருக்கும் இடத்தில் தடவி ஊறவிடவும். பிறகு இதை கழுவி வந்தால் பருக்கள் குறைவதோடு தழும்புகளும் குறையும்.
இது சிறண்ட பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. அதனால் முகப்பரு, பருக்கள், ப்ளாக் ஹெட்ஸ் மற்றும் வைட் ஹெட்ஸ் போன்றவற்றிலிருந்து தீர்வளிக்க செய்கிறது.
சரும வறட்சியை தடுக்க பல்வேறு வழிகள் உண்டு அதில் ஒன்று நல்லெண்ணெய் பயன்பாடு. நல்லெண்ணெய்யை டோனர் வடிவில் பயன்படுத்தி வந்தால் சருமத்தின் இளமைத்தன்மை தக்கவைக்கலாம். சருமம் வறட்சி இல்லாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.