1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 7 மார்ச் 2022 (12:15 IST)

எண்ணற்ற நன்மைகளை அள்ளித்தரும் செவ்வாழை பழம் !!

செவ்வாழை, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, பூவன் பழம், மலை (பச்சைப்பழம்), மலைப்பழம், பேயன் பழம், மொந்தம் பழம், மட்டி பழம், ஏலக்கி போன்ற வகைகளில் வாழைப்பழம் இருக்கிறது.


இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி-6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இந்த சத்துக்கள் எல்லா வாழை பழத்துக்கும் பொருந்தும்.

செவ்வாழையில் பீட்டா கரோட்டீன், பொட்டாசியம், வைட்டமின்-சி, ஆன்டி ஆக்ஸிடென்ட், நார்ச்சத்து போன்றவை இருக்கிறது. சொரி, சிரங்கு, தோல் வெடிப்பு போன்ற சரும நோய்களுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணத்தைத் தருகிறது. தொற்றுநோய் கிருமிகளைக் கொல்லும் ஆற்றலை கொண்டது.

சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. மலச்சிக்கலை குணப்படுத்துகிறது. மாலைக்கண் நோய், கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். இதை தினம் ஒன்று சாப்பிட பார்வை தெளிவாகும்.

மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு உணவுக்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும். மேலும் பல் வலி, பல்லசைவு போன்ற பல் சார்ந்த பிரச்னைகளை செவ்வாழைப்பழம் குணமாக்கும்.

நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடும் ஏற்படும். எனவே, இப்பாதிப்பு உள்ளவர்கள் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழைபழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமடையும். ஆண்மையும் பெருகும்.