புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

நரம்பு தளர்ச்சியால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அற்புத தீர்வு தரும் பூனைக்காலி செடி !!

நரம்பு தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பக்கவாதத்தால் பாதிக்கப் பட்டவர்கள் மற்றும் ஆண்மை தன்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பூனைக்காலி அருமையான மருந்து.

பூனைக்காலி நரம்பு தளர்ச்சியை நீக்கி நரம்பு மண்டலத்தைபலமாக்குவதோடு பக்கவாத பிரச்சனையையும் குணப்படுத்த உதவுகிறது.
 
நரம்பு தளர்ச்சியால் ஏற்படும் கைகால் நடுக்கத்தை குணப்படுத்தவும் பூனைக்காலி மூலிகை பயன்படுகிறது.
 
ஆண்களுக்கு ஏற்படக்கூடிய நரம்பு பலவீனங்கள் மற்றும் ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் பூனைக்காலி மூலிகை சிறப்புமிக்கது. தூக்கத்தில் விந்தணு வெளியேறும் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த பூனைக்காலி சிறந்த தீர்வாக அமைகிறது.
 
அரை தேக்கரண்டி பூனைக்காலி விதை பொடி அளவு எடுத்து தினமும் பாலில் கலந்து அல்லது தேனில் கலந்து காலையிலும் இரவிலும் குடித்து வந்தால் சிறந்த பலன் கிடைக்கும்.
 
பூனைக்காலி செடிகள் வேலிகளில், சாலையோரங்களில், சாதாரணமாகக் காணப்படும் ஒரு வகை கொடி. இதனுடைய பூக்கள், வேர்கள் மற்றும் விதைகள் நரம்புகளை வலுவாக்கி, ஆண்மை பாதிப்புகளைச் சரிசெய்கிறது. மலச்சிக்கலையும் போக்கும்.