1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

அல்சர் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய மற்றும் சாப்பிட வேண்டிய உணவு முறைகள்....!

பரபரப்பான வேலை சூழ்நிலையில் உள்ளவர்கள், நீண்ட நேரம் கண் விழித்து வேலை செய்பவர்கள்,  பசி வந்தவுடன் உணவு உண்ணக்கூடிய சூழ்நிலை இல்லையென்றால் கைக்கால்கள் நடுங்கும், படபடப்பு அதிகமாகும், மயக்கம் ஏற்படும், எளிதில் எரிச்சலடைவார்கள். அவர்கள் உணவை கண்டவுடன் பரபரப்பின்  காரணமாக அவசர அவசரமாக சாப்பிடுவார்கள். 
சாப்பிடும் உணவு அரைகுறையாக ஜீரணிக்கப்படுவதால் பல வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
 
பசி இல்லாமலும், மன அமைதி இல்லாத போதும் உண்ணப்படும் அனைத்து உணவுகளும் வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். இதுவும்  அல்சர் ஏற்பட முக்கிய காரணமாகும். எனவே உணவு உண்ணும் போது அமைதியும், நிதானமும் தேவை.
 
அல்சர் நோயாளிகள் எப்போதும் வயிறு முட்ட உணவை உண்ணக் கூடாது. வயிற்றுக்கு இரண்டு விதமான செயல்பாடுகள் உள்ளன. ஒன்று உணவுகளை செரிக்க வைத்தல். இரண்டாவது மன அமைதியை ஏற்படுத்துதல்.
 
அல்சர் உள்ளவர்கள் பால், தயிர், மோரை தவிர்க்க வேண்டும். மேலும் புளிப்பான பழ வகைகள், இனிப்பில்லாத இளநீர், வாழைப்பழம் போன்றவைகளையும்  தவிர்க்க வேண்டும்.
 
கொஞ்சம் மணத்தக்காளி கீரையை விதையுடன் எடுத்து, அத்துடன் சிறிது கசகசாவையும், ஒரு துண்டு தேங்காவும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து அந்த சாற்றை காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் 15, 20 நாட்களில் அல்சர் புண் ஆறிவிடும்.
 
உணவுடன் தினமும் அகத்தி கீரையை சேர்த்துக் கொள்வது  நல்லது. இதற்கு புண்களை ஆற்றும் தன்மை உள்ளது. வயிற்றில் வலி ஏற்பட்டால் சிறிது  சர்க்கரையையோ அல்லது உப்பையோ வாயில் போட்டு சுவைத்தால் கொஞ்ச நேரத்தில் வலி மறைந்து விடும்.