வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பல்வேறு அத்தியாவசிய சத்துக்களை கொண்டுள்ள கடலை எண்ணெய் !!

கடலையில் அதிகளவு புரோட்டின் நிறைந்து உள்ளது. அதேபோல இரும்புச்சத்து, துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்-டி போன்றவையும் நிறைந்துள்ளது.

கடலை எண்ணெய்க்கு இயற்கையாகவே உடலில் கலக்கும் தீங்கான பொருட்களை எதிர்த்து செயலாற்றும் சக்தி அதிகம் உள்ளது. நிலக்கடலையை தினமும் ஒரு அவுன்ஸ் (30 கிராம்) அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும்.
 
கடலை எண்ணய்யில் அடங்கியுள்ள ஒமேகா 6 கொழுப்பு எண்ணெய் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. இதனால் மார்பகக் கட்டி, புற்று நோய் ஏற்படுவது  தவிர்க்கப்படுகிறது.
 
உடலில் இருக்கும் திசுக்கள் மற்றும் செல்களில் வளரக்கூடிய புற்று நோயை எதிர்த்து கடலை எண்ணெய் சிறப்பாக செயல்புரிவதாக பல மருத்துவ ஆய்வுகளில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
கடலை எண்ணெய் கொண்டு செய்யப்படும் உணவுகளை சாப்பிடுவதால் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. 
 
நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்  அவர்களுக்கு எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் காத்துக் கொள்ளலாம்.