திங்கள், 2 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

ஆரஞ்சுப்பழத்தில் உள்ள சத்துக்களும் பயன்களும் !!

கனிமச்சத்துக்கள், கால்சியம், மக்னீசியம் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உள்ளது. ஆரஞ்சு ஜூஸ் மொத்தத்தில் எல்லாவகையிலும் ஆரோக்கியத்திற்கு ஏற்றது.

ஆரஞ்சுப்பழத்தில் தாது உப்புகளும் செறிந்து காணப்படுகின்றது. ஆரஞ்சுப்பழத்தில் விட்டமின் C ஊட்டச்சத்து செறிவுடன் கிடைக்கும். இது புற்று நோயைத் தடுக்கப்  பயன்படும். இதய நலத்திற்கு நல்லது.
 
ஆரஞ்சு ஜூஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு சிறப்பு பானம். புண்கள் ஆறுவதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றது.
 
இப்பழத்தில் காணப்படும் லுமினாய்டுகள் கான்சர் செல்களின் வளர்ச்சியை தடை செய்கிறன. தோல், நுரையீரல், மார்பகம் போன்றவற்றில் கான்சர் நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
 
ஆரஞ்சுப்பழத்தில் காணப்படும் பெக்டின் குடலில் நச்சுப் பொருட்கள் சேரவிடாமல் தடுத்து அவற்றை கழிவாக வெளியேற்ற உதவுகிறது. இதனால் பெருங்குடல் கான்சர் வராமல் பாதுகாக்கிறது.
 
பெக்டின் குடலின் கொலஸ்ரால் உறிஞ்சும் அளவைக் கட்டுப்படுத்தி இரத்தத்தில் கொலஸ்ராலின் அளவைக் குறைக்கிறது.
 
ஆரஞ்சுப்பழத்தில் ஊட்டச்சத்து பி உள்ளதால் பிறவிக் குறைபாடுகள், இதய நோய்களை எதிர்க்கும் குணங்கள் கொண்டுள்ளன. மேலும் விட்டமின் சி-யும் உள்ளதால் தடுமனை தடுக்க வல்லது.