மூலிகை மருத்துவத்தில் பயன்படும் செடி - நிலவேம்பு

சமீபத்தில் தமிழ்நாட்டில் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் நிலையில், தமிழக அரசால் நிலவேம்புக்(Andrographis paniculata) குடிநீர் டெங்குவிற்கு எதிரான தடுப்பு மருந்தாக அங்கீகரிக்கபட்டு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மறுத்துவமனைகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.


 
 
இதன் இலையும் தண்டும் மருத்துவ குணமுடையவையாகும். இச்செடி இரண்டு முதல் மூன்று அடி வரை நிமிர்ந்து வளர்கிறது. இதன் கக்கத்திலிருந்து உருவாகும் பூக்கம் இளஞ் சிவப்பு நிறமுடையவையாகும்.
 
நிலவேம்புக் குடிநீர் உட்கொள்ள சுரம், நீர்க்கோவை, வயிற்றுப் பொருமல், குளிர்காய்ச்சல் போன்ற நோய்கள் குணமாகும். 
 
மழை நேர வைரஸ் காய்ச்சலுக்கு, உடனடியாக கொடுக்க, நிலவேம்பு கஷாயம் நல்லது. நம் வீட்டிலேயே நிலவேம்பு பொடியை வாங்கி வைத்துக் கொண்டால் நல்லது. 
 
இந்த நிலவேம்பு பொடியுடன் தண்ணீர் சேர்த்து காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி, வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். உடனடியாக காய்ச்சல் பறந்தோடி விடும்.
 
இதன் இலையை அரைத்து பாலுடன் கலந்து காலையில் உட்கொள்ள உடல் வலுவாகும். பாம்புக் கடிக்கு இதன் இலையின் க அரைத்து கொடுக்க நஞ்சு நீங்கும்.
 
குழந்தைக்கு காய்ச்சல் சரியாக நிலவேம்பு, திப்பிலி, சுக்கு, சீந்தில் கொடி ஓர் நீறை அளவு எடுத்து ஒரு குவளைக்கு அரை குவளையாக வற்ற வைத்து கசாயம் செய்து கொடுக்க குணமாகும்.

எல்லாம் காட்டு

தலைமுடி அடர்த்தியாக வளர என்ன செய்யலாம்?!.. வாங்க பார்ப்போம்!..

வெப்ப அலையிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி?.. சுகாதார மையம் கூறிய நெறிமுறைகள்!..

எந்த பானத்தை எப்போது குடிக்க வேண்டும்?.. வாங்க பார்ப்போம்..

கோடை காலத்தில் வெயிலை சமாளிப்பது எப்படி?!.. சில ஈஸி டிப்ஸ்!...

7 நிமிடத்தில் புற்றுநோய் சிகிச்சை!.. ஒரு டோஸ் விலை என்ன தெரியுமா?...

Show comments