வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

உடல்எடையை குறைக்க உதவும் இயற்கை வைத்திய குறிப்புகள்....!!

வேளைக்கீரை, குடை மிளகாய், பூண்டு மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள அதிக கொழுப்பு குறையும்.
பூண்டு இரண்டு பல், ஓமம் கால் ஸ்பூன், மிளகு 3 மூன்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால்  கொழுப்பு கரையும்.
 
வாழை இலையை சமைத்து சாப்பிட்டால் தோல் பளபளக்கும். லெட்டூஸ் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் தொப்பையைக்  குறைக்கலாம்.
 
லவங்கப் பட்டையுடன் வேப்பிலை, மிளகு இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து அதிகாலையில் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரையும்.
 
உலர்ந்த ரோஜா இதழ், சுக்கு, ஏலக்காய் ஆகியவற்றில் தலா 100 கிராம் எடுத்து அரைத்து தினமும் காலை, மாலை இரு வேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்பு கரையும்.
 
முள்ளிக் கீரை சாறு எடுத்து அதில் நெல்லிக்காயை ஊற வைக்கவும். அதை வெயிலில் உலர்த்தி பொடியாக்கி காலை, மாலை இரு  வேளையும் சாப்பிட்டால் தொப்பை குறையும்.
 
பசலைக் கீரையுடன் பூண்டு, மிளகு, மிளகாய் வற்றல் சேர்த்து அவித்து கடைந்து சாப்பிட்டால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு  கரையும்.
 
நன்னாரி வேரை நெல்லிக்காய் சாற்றில் ஊறவைத்து உலர்த்திப் பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டால் உடல்  கொழுப்பு கரையும்.