பல் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு தரும் இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

Written By Sasikala
Updated: வியாழன், 29 ஏப்ரல் 2021 (19:07 IST)

ஒரு டம்ளர் நீரில் 1 சிட்டிகை பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு 2 வாரத்திற்கு ஒருமுறை வாயைக் கொப்பளிக்க பல் கூச்சத்தில் இருந்து விடுதலைக் கிடைக்கும்.
 
தினமும் காலையில் பற்களைத் துலக்கும் முன் தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி 4-5 நிமிடம் கொப்பளித்து துப்ப வேண்டும். இம்முறையால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
 
வேப்ப மரம் கிடைத்தால், வேப்பங்குச்சியைக் கொண்டு தினமும் பற்களைத் துலக்குங்கள் அல்லது வேப்பிலையை நீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு, அந்த  நீரால் தினமும் மூன்று வேளை வாயைக் கொப்பளித்து வாருங்கள்.
 
வாய் துர்நாற்ற பிரச்சனையை தீர்வு காண, ஒரு டம்ளர் நீரில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து, அதில் 1/4 டீஸ்பூன் படிகாரத்தை சேர்த்து வடிகட்டி, அதைக்  கொண்டு வாயைக் கொப்பளித்து வர, வாய் துர்நாற்றம் தடுக்கப்படும். எப்படியெனில் படிகாரமானது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் டாக்ஸின்கள் மற்றும்  அமிலங்களைத் தடுக்கும்.
 
ஒரு கப் நீரில் சிறிது வெந்தயக்கீரையை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு, அந்நீரால் வாயை தினமும் கொப்பளித்து வர, வெந்தயக்கீரையில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சித் தன்மை, வாய்ப் புண்ணை சரிசெய்வதோடு, வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும்.
 
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 2 டீஸ்பூன் உப்பு சேர்த்து, தினமும் காலையில் வாயைக் கொப்பளித்து வர, வாய் மற்றும் தொண்டையில் உள்ள கிருமிகள் அழிந்து, வெளியேற்றப்பட்டு, தொண்டைப்புண் குணமாகும்.

எல்லாம் காட்டு

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

குழந்தைகளுக்கு சொத்தைப் பல் வராமல் தடுப்பது எப்படி?.. வாங்க பார்ப்போம்!...

60 வயசுக்கு மேலயும் ஃபிட்டா இருக்கணுமா!?.. அர்ஜுன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க!..

அடுத்த கட்டுரையில்
Show comments