திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வயிற்றில் உண்டாகும் அமிலத்தன்மையை விரைவில் சரிசெய்யும் புதினா!

புதினாவை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், உடம்பில் ரத்தத்தைச் சுத்தம் செய்து வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.  மலச்சிக்கல் பிரச்சினைகள் வராமல் தடுக்கும். புதினா, வயிற்றில் உள்ள புழுக்களை அழித்து, வாயுத் தொல்லையைப் போக்குகிறது.

 
காய்ச்சல் ஏற்படும் சமயங்களில் உலர்ந்த புதினா ஒரு கைப்பிடி எடுத்து, ஒன்றரை லிட்டர் நீர் சேர்த்து, கால் லிட்டராகச் சுண்டக்  காய்ச்ச வேண்டும். இந்த நீரை, மூன்று, நான்கு மணி நேர இடைவேளையில் 30 - 60 மி.லி குடித்துவந்தால், காய்ச்சல் சரியாகும்.
 
அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் ஜீரணமாக்குகிறது, இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும்,  பசியை தூண்டும், மலச்சிக்கல் நீங்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்சனைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது.
 
இதை துவையலாக செய்து சாப்பிட்டால் வயிற்றுக்கோளாறுகள் அகலும், கடுமையான வயிற்றிப் போக்கினை நிறுத்தும் சக்தி புதினாவுக்கு உண்டு. கர்ப்பிணி பெண்களுக்கு அடிக்கடி வாந்தி ஏற்படுவதை தடுக்கவும் இதனை பயன்படுத்துவது உண்டு.
 
மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப்  பயன்படுகிறது. முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் இதன் சாரை முகத்தில் தடவி வர பலன் கிடைக்கும். 
 
புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்புச்  சக்தி அதிகரிக்கும்.