Daily Horoscope
✕

வயிற்றில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் போக்கும் வைத்திய குறிப்புகள்...!!

Written By Sasikala
Published: வியாழன், 3 ஜூன் 2021 (10:12 IST)

அல்சர் நோய் வருவதற்கு முதல் காரணம் என்னவென்றால் காலதாமதமாக உணவருந்துதல், முறையற்ற உணவு முறை, கடைகளில் விற்கப்படும் ரெடிமேட்  உணவுகளை அதிகளவு உட்கொள்வது போன்ற காரணங்களால் இந்த அல்சர் பிரச்சனை ஏற்படுகிறது.
 
மணத்தக்காளி கீரையை சூப்பாகவோ அல்லது பொறியலாகவோ உட்கொண்டு வந்தால் குடல் புண், வயிற்று புண், அல்சர் மற்றும் வாய்புண் போன்றவற்றை சரி  செய்யும்.
 
பச்சை வாழைப்பழத்தை தினமும் உட்கொண்டு வர, வயிற்று குடல்களில் பழுதுபட்ட மெல்லிய ஜவ்வு தோள்களை வளர செய்யும், இதனால் அல்சர் நோயை சரிசெய்ய உதவுகிறது.
 
அல்சர் குணமாக வீட்டு வைத்தியம் தினமும் தேங்காய் பாலை உணவில் சேர்த்து கொள்ளலாம் அல்லது தேங்காய் பாலை மட்டும் அருந்தி வர வயிற்று புண்,  குடல் புண், வாய் புண் மற்றும் அல்சர் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய மிகவும் உதவுகிறது.
 
தினமும் சிறிதளவு கொப்பரை தேங்காயை மட்டும் உட்கொண்டு வந்தால் போதும், அல்சர் பிரச்சனை சரியாகும்.
 
ஆப்பிள் ஜூஸை தினமும் அருந்தி வந்தால், அல்சரினால் ஏற்படும் வயிற்று வலியை சரி செய்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும். பழுத்த பாகற்காயை தினமும்  சமைத்து உண்டு வர, வயிற்றில் உள்ள கிருமிகளை சுத்தம் செய்வதுடன், குடலுக்கு வலிமை அளிக்கிறது. மேலும் பித்தத்தையும் தணிக்கிறது.

எல்லாம் காட்டு

இரவு நேரத்தில் (Night Shift) பணி புரிவதில் உடலில் ஏற்படும் பாதிப்பு!.. மக்களே அலார்ட்..

வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் பலன்கள்!.. வாங்க பார்ப்போம்!...

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments