1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 28 ஜனவரி 2022 (12:56 IST)

தலைமுடியை மென்மையாக வைத்திருப்பதற்கு உதவும் பால் மசாஜ் குறித்து பார்ப்போம் !!

பால் எலும்புகளுக்கு மட்டுமல்ல, தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும் கால்சியம் தேவை. உடலில் இரும்பு சத்தை உறிஞ்சுவதற்கும் உதவும்.


முடி உதிர்தலை மீட்டெடுப்பதற்கு வைட்டமின் டி உதவும். புதிய மயிர்க்கால்களை தூண்டவும், தடைப்பட்ட முடி வளர்ச்சியை மீட்டெடுக்கவும் துணைபுரியும்.

வைட்டமின் சி: இது கோலாஜன் உற்பத்தியை அதி கரிக்க உதவும். ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்தும் பாதுகாக்கும்.

தலைமுடி கெராடின் என்ற புரதத்தால் ஆனது. அதனால் தலைமுடியின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும், அவற்றை வலிமையாக்குவதற்கும் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. பயோட்டின்: இது பாலில் கலந்திருக்கும் ஒருவகை ஊட்டச்சத்தாகும். முடி உதிர்தலை தடுத்து அதன் வளர்ச்சியை தூண்டுவதற்கு துணைபுரியும். மயிர்க்கால்களின் வளர்ச்சி வீதத்தையும் அதிகரிக்கச்செய்யும்.

ஹேர் மாஸ்க்: பால் மற்றும் வாழைப்பழம் பயன்படுத்தி செய்யப்படும் மசாஜ் இது. தலைமுடியை வலுவாகவும், அடர்த்தியாகவும் மாற்றவும், பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வு காணவும் உதவும்.

தேவையான பொருட்கள்: பால் - அரை கப், வாழைப்பழம் - 1. செய்முறை: வாழைப்பழத்தை துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போடவும். அதனுடன் பால் சேர்த்து மில்க் ஷேக் பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும். பின்னர் அந்த விழுதை தலைமுடியில் நன்றாக தடவி மசாஜ் செய்துவிட்டு ‘ஷவர் கப்’ எனப்படும் மெல்லிய இழையால் தலையை மூடிவிடவும். சுமார் 30 நிமிடங்கள் கழித்து ஷாம்பு கொண்டு தலைமுடியை கழுவி விடலாம்.

தயிர்-தேன்: இது கூந்தலில் ஏற்படும் வறட்சியை சமாளிக்க உதவும். கூந்தல் மென்மையான தன்மைக்கு மாறுவதற்கும் வழிவகை செய்யும். தேவையானவை: தயிர் 3 டேபிள்ஸ்பூன், தேன் 1 டேபிள்ஸ்பூன், எலுமிச்சை சாறு 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: அகன்ற பாத்திரத்தில் தயிர், தேன், எலுமிச்சை சாறு மூன்றையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். அதனை கூந்தலில் நன்றாக தடவி மசாஜ் செய்துவிட்டு 20 நிமிடங்கள் உலர விடவும். பின்பு ஷாம்பு கொண்டு கழுவிவிடலாம்.