ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 16 மார்ச் 2022 (10:26 IST)

பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் குப்பைமேனி !!

குப்பைமேனி இலைகள் பல விதமான மருத்துவ குணங்கள் கொண்டதாகும். இந்த இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு அவர்களின் உடலில் இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரிக்கிறது.


குப்பைமேனி இலையின் சாறு எடுத்து, தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி வடிகட்டி, மூட்டு வலி உள்ள இடத்தில் தடவிவர மூட்டு வலிகள் நீங்கும்.

குப்பைமேனி இலைகளின் சாற்றை சொறி, சிரங்கு, படை, தோல் அரிப்பு போன்ற தோல் சார்ந்த பாதிப்புகளின் தடவி வந்தால் அதிலிருக்கும் நுண்கிருமிகள் அழிந்து, நல்ல குணம் ஏற்படும். தோலில் தொற்று கிருமிகளால் பாதிப்பு ஏற்படாமல் காக்கும்.

பத்து குப்பைமேனி இலையை, நன்கு சுத்தம் செய்து, பசும்பாலுடன் காய்ச்சி கொடுக்க உடல் ஆரோக்கியம் மேம்படும். ஒரு கைப்பிடி அளவு எடுத்து, கஷாயமாக்கி கொடுக்க சளி மற்றும் இருமல் குணமாகும்.

குடற்புண், செரிமானமின்மை, வயிற்றில் ஜீரண அமிலங்களின் சமசீரற்ற நிலைக்கு குப்பைமேனி இலைகள் சிலவற்றை பச்சையாகவோ அல்லது அந்த இலைச்சாறு துளிகள் சிறிது அருந்திவந்தாலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

குப்பைமேனி இலைகளை மஞ்சள் தூள் மற்றும் கோரை கிழங்கு பொடியுடன் சேர்த்து முகத்தில் தடவி,அது காய்ந்த பிறகு முகத்தை கழுவ வேண்டும். இது போன்று தொடர்ந்து செய்து வர தேவையற்ற முடிகள் முளைப்பதை தடுக்கலாம்.