செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அற்புத மருத்துவ பயன்களை கொண்ட கோரைக்கிழங்கு !!

கோரைக் கிழங்கு சூரணத்தை அரை ஸ்பூன் அளவு எடுத்து காலை மாலை என இருவேளையும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் புத்தி கூர்மை அதிகமாகும்.
 

காலையில் இதனை சுண்டைக்காய் அளவு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் குடல் கிருமிகள் அனைத்தும் முற்றிலுமாக அகன்றுவிடும். இந்த மருந்தை எடுத்துக்கொள்ளும் நாட்களில் சுடு சோற்றில் எலுமிச்சம் பழம் சாறும் கொஞ்சம்நெய்விட்டு சாப்பிடவேண்டும்.
 
கோரைக்கிழங்கால் பித்தம், தேக எரிச்சல், தாகம், குதிகால் வாதம், குளிர் சுரம், வாத சுரம் முதலியவை நீங்கும். கோரைக்கிழங்கு, காய்ச்சாத பசும் பால் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து உடலில் பூசிக் குளித்து வர வியர்வை நாற்றம் குணமாகும்.
 
இஞ்சி, கோரைக்கிழங்கு இரண்டையும் சம அளவாக அரைத்து பசையாக்கி தேன் சிறிதளவு சேர்த்து சுண்டைக்காய் அளவு சாப்பிட குடல்  புழுக்கள் வெளிப்படும்.
 
கோரைக்கிழங்கு நான்கினை எடுத்து நசுக்கி இரண்டு டம்ளர் நீரில் இட்டு கொதிக்க வைத்து, குடிநீர் செய்து வேளைக்கு 2 தேக்கரண்டி அளவு 2 நாட்கள் உள்ளுக்கு கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணம் குணமாகும்.
 
இது ரத்தத்திலுள்ள அசுத்தங்களையும் போக்கும். நாட்பட்ட வயிற்றுப் போக்கையும் நிறுத்தவல்லது. முக்கியமாக இது குழந்தைகளுக்கு மிக ஏற்றது. உடலுக்குக்  குளிர்ச்சியை உண்டாக்கும்.