Daily Horoscope

முகத்தில் சேரும் அழுக்குகளை நீக்கி பளிச்சிட செய்யும் தக்காளி!

Updated: வெள்ளி, 25 ஜனவரி 2019 (16:45 IST)
 
பழுத்த தக்காளியை நன்கு பசைப்போல விதையுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.  இவ்வாறு செய்து  வந்தால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை, கருமை நிறம் மறையும்.
 
தக்காளி குளிர்ச்சியானது. இதனுடன் வெள்ளரிச்சாறை சம அளவில் எடுத்து பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் கழுவ  வேண்டும். தொடர்ந்து  செய்து வந்தால், பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்.
 
தக்காளி சாறு அரை டீஸ்பூன் தேன்அரை டீஸ்பூன் சமையல் சோடா ஒரு சிட்டிகை இந்த மூன்றையும் கலந்து கொள்ளுங்கள். இந்த  பேஸ்ட்டை கருவளையத்தின் மேல் பூசி 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். கருவளையங்கள் காணாமல் போகும்.
 
தக்காளியைப் போன்றே எலுமிச்சையிலும் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. அந்த எலுமிச்சையின் சாற்றினை படுக்கைக்குச் செல்லும் முன், நீருடன் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.
 
முகத்தின் அழகுக்கு உருளைக்கிழங்கும் நல்ல மருத்துவம் தரும். உருளைக்கிழங்கை அரைத்து அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற  வைத்து, பின் குளிர்ந்த நீரினால் முகத்தைக் கழுவ வேண்டும். இதனை வாரம் ஒருமுறை செய்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments