புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வீட்டிலேயே இருக்கு மருத்துவகுணம் நிறைந்த துளசி...!!

துளசி கார்ப்பு சுவை உடையது. நல்ல துளசி, கருந்துளசி, செந்துளசி, கற்பூரத்துளசி, நாட்டுத்துளசி, சிவத்துளசி, சிறுதுளசி, நாய்துளசி, நிலத்துளசி, பெருந்துளசி எனத்  துளசியில் பலவகை உண்டு. துளசி வகை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகை மருத்துவப் பண்பு உண்டு.

அன்றாடம் துளசியை சிறிதளவு வெறும் வாயில் போட்டு மென்று உண்ணுதல் அல்லது துளசி நீர் அல்லது துளசி டீ பருகுவது போன்றவை சளி மற்றும் நுரையீரல்  பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கின்றன. 
 
முக்கியமாக துளசி நுரையீரலில் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மைக் கொண்டது ஆகும்.
 
வயிற்று உளைச்சல், தாகம், கரமாந்தம், சூடு ஆகிய நோய்களை நல்ல துளசி போக்கும். நச்சு, கபம், கடிநச்சு ஆகியவற்றைச் செந்துளசி நீக்கும். இருமல், மார்புச்சளி  ஆகியவற்றை கருந்துளசி குணப்படுத்தும். 
 
உடலுக்கு ஊட்டச்சத்தைக் கொடுப்பதோடு, குத்திருமல் நோய்க்கும் நாய்துளசி நல்ல மருந்தாகும். எலிக்கடி நச்சை நீக்கவும் பிற நச்சுக்கடிகளுக்கும் முள்துளசி நல்ல  மருந்தாகும்.
 
தினமும் காலையில் 10 துளசி இலையை மென்று தின்பதால் இரத்தம் சுத்தியடையும். மார்பு வலி, தொண்டை வலி, வயிற்று வலி ஆகிய கோளாறுகள் நீங்கும்.
 
துளசியைத் தினமும் உட்கொண்டு வந்தால் காது வலி, வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும். துளசி கஷாயம் வாய் துர்நாற்றத்தையும்  பால் விளை நோய்களையும் நீக்கும்.
 
உடலின் வெப்பத்தை ஒரே சீராக வைத்திருப்பதற்கு துளசி உதவுகிறது. துளசிச் சாறு சளித் தொல்லை, ஆஸ்துமா ஆகியவைகளைக் குணப்படுத்தும். துளசி ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. இருதயம் போன்ற உறுப்புகள் சீராக இயங்குவதற்கு துளசி உதவுகிறது.