திங்கள், 18 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (15:17 IST)

ஊறுகாய் சாப்பிடுவது நல்லதா கெட்டதா?

இந்திய உணவு முறையில் தவறாமல் இடம்பெறும் துணை உணவு ஊறுகாய். பல பொருட்களை கொண்டும் விதவிதமாக தயாரிக்கப்படும் ஊறுகாய்கள் நன்மைகள், தீமைகள் இரண்டையுமே கொண்டுள்ளன. அதுகுறித்து பார்ப்போம்.


  • காய்கறிகள், பழங்களை நொதித்தல் முறையில் ஊறுகாய் செய்வதால் அதில் லாக்டிக் அமிலம், சிட்ரிக் அமிலம், அசிட்டிக் அமிலம் அதிகமாகிறது.
  • இந்த அமிலங்கள் குடலில் உள்ள ஆரோக்கியமான நுண்ணியிர்களை வளப்படுத்துகின்றன.
  • ஊறுகாயை சாப்பிடுவதால் செரிமான சக்தி அதிகரிக்கும் என்பதால் உணவில் சேர்க்கப்படுகிறது.
  • சில ஊறுகாய் வகைகள் மெட்டபாலிசத்தை மேம்படுத்துவதோடு கொழுப்பை கட்டுப்படுத்துகிறது.
  • ஊறுகாயில் உள்ள அதிகளவிலான உப்பு மற்றும் எண்ணெய் உடலுக்கு தீங்கு விளைவிப்பவை.
  • பலர் ஊறுகாய் அதிகம் சாப்பிடுவதால் எடை அதிகரிப்பு பிரச்சினையை எதிர்கொள்ளலாம்.
  • ஊறுகாயில் எண்ணெய் அதிகம் உள்ளதால் இதய ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
  • அளவாய் சாப்பிட்டால் அனைத்தும் அமிர்தமே என்பதற்கேற்ப ஊறுகாயையும் குறைவாக எடுத்துக் கொள்வது சிறந்தது.