செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

கோடையில் கூந்தலை பரமரிக்கும் வழிமுறைகள்.....!

அதிகமான வியர்வையால், தலையில் அதிகப்படியான அழுக்குகள் தங்குவதை தவிர்க்கலாம். மேலும் தலையும் நன்கு சுத்தமாக இருக்கும். கோடையில் உடல்  வறட்சியானது அதிகம் இருக்கும். அவ்வாறு வறட்சி ஏற்பட்டால், கூந்தல் உதிர ஆரம்பிக்கும் எனவே வறட்சியைப் போக்க அதிக அளவில் தண்ணீர் பருக  வேண்டும்.
கோடையில் அதிகமாக கூந்தல் வெடிப்புகள் ஏற்படும். எனவே அவ்வாறு கூந்தலின் முனைகளில் வெடிப்புகள் ஏற்பட்டால், அதனை உடனே அகற்றிவிட  வேண்டும். இல்லையெனில் அவை கூந்தல் வளர்ச்சியை முற்றிலும் தடுத்துவிடும்.
 
தலைக்கு மசாஜ் செய்ய வேண்டும். இதனால் தலையில் படிந்திருக்கும் மாசுக்கள் முற்றிலும் நீங்கி, இரத்த ஓட்டமானது சீராக இருப்பதோடு, கூந்தலும்  வலுவோடு இருக்கும். அதிலும் இதனை தலைக்கு குளிக்கும் முன், சிறிது நேரம் செய்து குளித்தால், மிகவும் நல்லது. 
 
வெயிலில் செல்லும் போது, சூரியக்கதிர்களில் தாக்கத்தில் இருந்து கூந்தலைப் பாதுகாக்க, வெளியே செல்லும் போது, தலைக்கு தொப்பி அல்லது துணியை  கட்டிக் கொண்டு செல்ல வேண்டும். குறிப்பாக, அவ்வாறு தொப்பி போடும் போது வியர்வை அதிக நேரம் தலையில் தங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 
 
சருமத்திற்கு சன் ஸ்கிரீன் லோசன் பயன்படுத்தும் போது, கூந்தலுக்கு சன் ஸ்கிரீன் பயன்படுத்தக் கூடாதா என்ன? எனவே கூந்தலுக்கு என்று விற்கும் சன் ஸ்கிரீன் வாங்கி பயன்படுத்தினால், சூரியக்கதிர்களின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.