வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இயற்கையான முறையில் பொடுகு தொல்லையை போக்கும் குறிப்புகள்....!!

மருதாணி இலையை அரைத்து அதனுடன் கொஞ்சம் தயிர், எலுமிச்சை சாறு கொஞ்சம் சேர்க்க வேண்டும். இந்த கலவையை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

வேப்பிலை கொஞ்சமும் அதனுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நல்லா அரைத்து தலையில் தேய்த்து 1 மணி நேரம் ஊறவைத்து பின்பு குளித்து வந்தால்  பொடுகு பிரச்சனை தீரும்.
 
தேங்காய் எண்ணய்யுடன் வேப்ப எண்ணெய்யும் சேர்த்து காய்ச்சி தேய்த்து வந்தால் பொடுகு நீங்கும். நெல்லிமுள்ளி, வெந்தயம், சிறிது மிளகு இவற்றை ஊறவைத்து மைப்போல அரைத்து தலையில் தடவி ஒரு மணிநேரம் ஊறிய பிறகு, நன்கு அலசினால் பொடுகு தொல்லை மறையும்.
 
நீலகிரி தைலத்தை சூடாக்கி தலையில் தடவி, வெந்நீரில் ஒரு பெரிய துண்டை நனைத்து தலையில் கட்டி விடுங்கள். பிறகு நன்கு அலசி விடவும்.
 
தேங்காய் எண்ணெய்யுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்து, அந்த எண்ணெய்யை தொடர்ந்து தேய்த்து வந்தால் பொடுகு மறைந்துவிடும்.
 
பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெய்யில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெய்யை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்சனை தீரும்.
 
ஆலிவ் எண்ணெய்யுடன் இஞ்சிச்சாறு சேர்த்து நன்றாக கலந்து தலைக்கு தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பிறகு குளித்து வந்தால் பொடுகு குறையும்.