Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இருமலை குறைக்க உதவும் சுக்கு கருப்பட்டி காபி செய்வது எப்படி...?

Written By Sasikala
Updated: வியாழன், 15 ஜூலை 2021 (19:21 IST)
கருப்பட்டி - 2 டேபிள் ஸ்பூன் பொடி செய்து கொள்ளுங்கள்
 
சுக்கு பொடி செய்ய:
 
உலர்ந்த இஞ்சி/சுக்கு தூள் - 1/2 கப்
மல்லி (தனியா) - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
பனங்கற்கண்டு - 3 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:
 
சுக்கு பொடி தயாரிக்க கொடுக்கப்பட்ட பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து வைத்து கொள்ளவும். பின் அதனை காற்றுப்புகாத வண்ணம் ஒரு  டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.
 
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சுக்குப் பொடி ஒரு டீஸ்பூன் மற்றும் கருப்பட்டியை சேர்த்து நன்கு கலக்கி ஒரு 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். பின்பு அதனை இறக்கி வடிகட்டி இறக்கினால், சூடான கருப்பட்டி காபி தயார்.
 
மருத்துவ குண நலன்கள்:
 
தொண்டைப்புண், தொண்டை கரகரப்பு, சளி, இருமல், தொண்டைக்கட்டு போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு கப் கருப்பட்டி காபி குடிப்பது நல்ல நிவாரணம் தரும். மேலும் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து,நமக்கு புத்துணர்ச்சியைப் பெற முடியும்.

எல்லாம் காட்டு

உடல் நலம் சரியில்லாதபோது என்ன சாப்பிட வேண்டும்?!.. வாங்க பார்ப்போம்!..

உறுப்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகள்.. வாங்க பார்ப்போம்!...

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments