Daily Horoscope
✕

உடல் ஆரோக்கியத்தை காப்பதில் லிச்சி பழம் எவ்வாறு உதவுகிறது....?

Written By Sasikala
Updated: புதன், 2 செப்டம்பர் 2020 (11:01 IST)

லிச்சி பழத்தில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்சியம், மாவுச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, தையாமின், ரிபோப்ளோவின், நியாசின், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. தினமும் ஒரு லிச்சி பழம் உண்டு வந்தால் ரத்த உருவாக்கம் அதிகமாகும்.
 
இருமல், சளி, காய்ச்சல், போன்ற பொதுவான நோய்களுக்கு எதிராக போராடி உடலுக்கு தேவையான பாதுகாப்பை அளிக்கிறது. மேலும் நோய் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கும் சிறந்த பழமாகும்.
 
லிச்சி பழத்தை தினமும் உண்டு வந்தால் இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாக வேலை செய்யும். லிச்சிப் பழத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பொருள் உள்ளதால், இதனை உட்கொண்டால் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயில் இருந்து நல்ல  பாதுகாப்பு கிடைக்கும்.
 
லிச்சிப் பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இப்பழத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை நோய்களின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும்.

எல்லாம் காட்டு

இரவு நேரத்தில் (Night Shift) பணி புரிவதில் உடலில் ஏற்படும் பாதிப்பு!.. மக்களே அலார்ட்..

வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் பலன்கள்!.. வாங்க பார்ப்போம்!...

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments