செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவும் நெல்லிக்கனி !!

நெல்லிச்சாறுடன் தேன் கலந்து அல்லதுதேன் கலந்த நெல்லியை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும். 

இரத்தத்தில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்கி இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கும்.  
 
நெல்லி லேகியம் அல்லது நெல்லிக்காயை தினம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலிமை பெரும். இதய கோளாறுகள், இரத்த குழாய் அடைப்பு நீங்கும், மதுவால் புண்ணாகிப்போன உள்உறுப்புகளை சீராக்கும். 
 
நெல்லியில் இருக்கும் குரோமியம் சத்துகள் இதயம் சம்பந்தமான பாதிப்புகளை வராமல் தடுக்கிறது. இதய தசைகளை வலுவாக்குகிறது. இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. இதய வால்வு, இரத்தக்குழாய்களை சீராக வைக்கிறது. அடைப்புகள் ஏற்படுவதையும், மாரடைப்பு வருவதையும் தடுக்கிறது. இதயத்துக்கு வலு கொடுக்  கிறது.

நெல்லிக்கனி சிறுநீரகத்தில் படியும் சிட்ரேட் மற்றும் கால்சியம் படிமங்கள் கற்களாக மாறுவதைத் தடுத்து அவற்றைக் கரைத்து சிறுநீர் வழியாக  வெளியேற்றுகின்றது. தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கோளாறு தடுக்கப்படுவதோடு சிறுநீர் பிரிவதிலும் பிரச்சனை இருக்காது.
 
கல்லீரலில் உண்டாகும் நோய்த்தொற்றையும் கிருமிகளையும் அழித்து மஞ்சள் காமாலை வராமல் தடுக்கிறது. சிறுகுடல் பெருங்குடல் போன்றவற்றில் தங்கும்  உணவு கழிவுகளை வெளியேற்றி உறுப்புகளை பலப்படுத்தும்.
 
நெல்லி விதையுடன் சுத்தமான ஓமம், பசலைக்கீரை விதையை சமமாக எடுத்துக் கொண்டு பொடியாக்கி, தேன் கலந்து சுண்டைக்காய் அளவு உருட்டி காலை, மாலை தண்ணீ­ரில் உட்கொள்ள, பெருநோய் எனப்படுகின்ற குஷ்டநோய் வகைகள் யாவும் நீங்கும்.