Daily Horoscope
✕

இஞ்சியின் பயன்களும் மருத்துவ குணங்களும்...!

Updated: சனி, 2 ஜூன் 2018 (13:09 IST)
 
ஆஸ்துமா நோயாளிகள் தினமும் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வர, ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
 
நீரில் சிறிது இஞ்சியை தட்டிப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க, நெஞ்சுப் பகுதியில் தேங்கியுள்ள சளி  முறிந்து, விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
 
பல்வலி இருக்கும்போது, இஞ்சி துண்டை ஈறுகளில் மசாஜ் செய்தால், நிவாரணம் கிடைக்கும். இல்லாவிட்டால், நீரில் இஞ்சியை தட்டிப் போட்டு கொதிக்க  வைத்து, அந்நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.
இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை  நீங்கும்.
 
இஞ்சி குமட்டல் மற்றும் வாந்தி வருவதைத் தடுக்கும். அதுமட்டுமின்றி, காலையில் ஏற்படும் சோர்வையும் இஞ்சி தடுக்கும். இஞ்சியைத் தட்டி நீரில் போட்டு  கொதிக்க வைத்து இறக்கி, தேன் கலந்து பருக செரிமான பிரச்சனைகள் அகலும். அதிலும் காலையில் பருகினால், உங்கள் செரிமான மண்டலம் சுத்தமாகி, அதன்  செயல்பாடு அதிகரிக்கும்.

எல்லாம் காட்டு

தினமும் ஒரு பப்பாளி!.. உடலுக்கு ஏற்படும் நன்மைகள்!..

டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?!.. பொதுமக்கள் அலார்ட்!..

நள்ளிரவு உணவால் வரும் ஆபத்து!.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

இரவு நேரத்தில் (Night Shift) பணி புரிவதில் உடலில் ஏற்படும் பாதிப்பு!.. மக்களே அலார்ட்..

வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் பலன்கள்!.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments