1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ள இஞ்சி !!

இஞ்சியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. இது சமையல் பொருளாகவும் மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. இஞ்சி செடியின் வேரைத்தான் நாம் இஞ்சியாக சாப்பிடுகிறோம். இதில் ஜிஞ்சரால், ஜிஞ்சிபெய்ன், மாவுசத்து, புரோட்டீன் அதிகம் உண்டு.

இஞ்சியை மருந்தாகப் பயன்படுத்தும் முயற்சியில் பல நாடுகள் ஈடுபட்டு வெற்றி கண்டுள்ளன. வயிற்றுக் கோளாறுகளை சரி செய்வதற்கும் வாந்தியை நிறுத்துவதற்கும் இதை 2 ஆயிரம் ஆண்டுகளாக மருந்தாகப் பயன்படுத்தி வருகின்றனர் சீனர்கள்.
 
சிறுநீரகப் பாதை சம்பந்தமான தொற்றுநோய்களை குணப்படுத்த இஞ்சியை உபயோகித்தனர். மருத்துவர்கள் மூட்டு வலிக்கு இஞ்சி சிறந்த மருந்து என நவீன மருத்துவமே ஒப்புக் கொண்டிருக்கிறது.
 
வாந்தியை சமாளிக்கும் ஆற்றலையும் தரவல்லது இஞ்சி. கருவைச்சுமக்கும் அதிர்ஷ்டம் வாய்க்கும் பெண்களில் முக்கால்வாசி பேருக்கு கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்கள் இனிமையான அவஸ்தை.
 
கர்ப்பம் என்றால் காலையில் தூங்கி எழுந்ததும் குமட்டிக் கொண்டு வரும் வாந்தி தான் அவஸ்தைக்குக் காரணம். வாந்தியைத் தடுக்கும் மருந்து எதையாவது எடுத்துக் கொள்ளலாம் என்றால், அந்த மருந்தால் கருவிலிருக்கும் சிசுவுக்கு ஏதாவது பாதிப்பு வந்தால் என்ன செய்வது? என்ற பயம் நம் முன் நிற்கிறது.
 
பக்க விளைவுகள் இல்லாத வாந்தி தடுப்பு மருந்தாக இஞ்சியை பயன்படுத்தலாம். இஞ்சி மசக்கை வாந்தியையும் தவிர்க்கும் அருமருந்தாக பயன்படுகிறது. இஞ்சியில் உள்ள காரத்தன்மை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அழித்து புற்றுநோய் வரவிடாமல் பாதுகாக்கிறது. ஆண்கள் இஞ்சி சாறை பருகினால் புரோஸ்டேட் என்ற புற்றுநோய் வராது.
 
இஞ்சியில் உள்ள ஃபீனால் மற்றும் ப்ளேவோனாய்டுகள் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கும். மூளைக்கு புரோட்டின் அளவை அதிகரிக்கச் செய்து மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். இதனால் மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுகிறது.
 
இஞ்சிச் சாறு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஒரு டம்ளர் இஞ்சி சாறு பருகி வந்தால் நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.
 
இஞ்சி சாறு பருகி வந்தால் செரிமான பிரச்சனை நீங்கி நல்ல பசியை ஏற்படுத்தும். மேலும் வயிற்றுப் போக்கு, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தரும்.