திங்கள், 30 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 27 ஜூன் 2017 (21:27 IST)

நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும் இஞ்சி குளியல்

டிடாக்ஸ் என்னும் இஞ்சி குளியல் குளியல் முறையை பின்பற்றுவதால் உடலை தாக்கும் நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.


 

 
டிடாக்ஸ் என்னும் குளியல் முறை தற்போது அதிகரித்து வருகிறது. இந்த டிடாக்ஸ் குளியல் முறையில் பலவிதம் உள்ளது. இந்த டிடாக்ஸ் குளியல் முறையை வாரத்திற்கு ஒரு முறை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி செய்து வந்தால் உடல் மிகவும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். 
 
இங்கு நாம் இஞ்சி டிடாக்ஸ் குளியல் பற்றி பார்ப்போம். இதனால் உடலை தாக்கும் நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி உடலில் உண்டாகும் அலர்ஜி பிரச்சனைகளை வராமல் தடுக்க உதவும்.
 
இந்த குளியல் முறை மேற்கொள்ள நமக்கு தேவையாவனை இஞ்சி மட்டும்தான்.
 
இஞ்சியை பொட்டியாக்கி 1/2 கப் எடுத்து கொதித்த நிரில் 15 முதல் 20 நிமிடம் கொட்டி ஊறவைக்க வைக்க வேண்டும். பின்னர் அந்த நீரில் குளிக்க வேண்டும். இந்த இஞ்சி குளியல் மேற்கொண்டு முடித்த, ஒரு மணி நேரத்திற்கு பின் அதிக அளவு வியர்வை வெளியேறும். எனவே இந்த குளியலை இரவில் எடுப்பது சிறந்தது. 
 
மேலும் இந்த குளியலுக்கு பின் நிறைய தண்ணீர் பருக வேண்டும்.