1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 7 ஜூன் 2022 (15:52 IST)

செரிமானத்தை பராமரித்து உடலுக்கு தேவையான சக்தியை தரும் கேழ்வரகு !!

Ragi
கேழ்வரகு இரும்புச்சத்து நிறைந்தது, இரத்த சோகை உள்ளவர்களுக்கும், குறைந்த ஹீமோகுளோபின் அளவு உள்ளவர்களுக்கும் இது பயனளிக்கும்.


முளைக்கட்டிய கேழ்வரகில் வைட்டமின் சி உள்ளது. இது இரத்தத்தில் இரும்புசத்தை உடல் உறிஞ்சுவதற்கு உதவுகிறது.

கேழ்வரகு உடலுக்கு சக்தியை தருவதால் நம் முன்னோர்கள் காலை உணவாக இதை சாப்பிட்டு வந்தனர். இது பசியை கட்டுப்படுத்தும்.

கேழ்வரகில்  உள்ள பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் பசியைக் குறைக்கிறது மற்றும் செரிமானத்தின் வேகத்தை பராமரிக்கிறது. இரத்த சர்க்கரையை பாதுகாப்பான வரம்பிற்குள் வைத்திருக்கிறது.

காலை உணவில் அல்லது மதிய உணவில் கேழ்வரகை சேர்த்துக்கொள்வது சிறந்தது. இதன் மூலம்  உங்கள் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்.

கேழ்வரகு உட்கொள்வதால் அதிக அளவு கொலஸ்ட்ரால் குறைகிறது.  இதில் அமினோ அமிலங்கள் உள்ளன. இது கல்லீரலில் இருந்து அதிகப்படியான கொழுப்பை அகற்றுவதன் மூலம் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.  

கேழ்வரகில் த்ரோயோனைன் என்கிற  அமினோ அமிலமும் உள்ளது, இது கல்லீரலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது மற்றும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.

கேழ்வரகில் அதிகளவு கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளதால் எலும்பு தேய்மானத்தை தடுக்கிறது. இரத்தத்தில் கால்சியம் அளவை சரியான அளவில் இருக்க உதவுகிறது.