புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 14 மே 2022 (09:50 IST)

பெருங்குடல் கோளாறுகள் போன்ற பிரச்சனைகளை போக்கும் பெருஞ்சீரகம் !!

Perunjeeragam
சர்க்கரை வியாதி கொண்டவர்களுக்குக் சிறந்த இயற்கை மருத்துவ பொருளாக, பெருஞ்சீரகம் இருக்கிறது. பெருஞ்சீரகத்தில் வைட்டமின் சி சக்தி அதிகமாக உள்ளது. இது உடலின் இரத்த சர்க்கரை அளவை சரியான விகிதத்தில் இருக்க செய்வதில் பெரும் உதவி புரிகின்றது.


நீர் கோர்ப்பு பிரச்சனை உள்ளவர்கள் அவ்வப்போது பெரும் சீரகத்தை சாப்பிட்டு வந்தால், உடலில் சேர்ந்திருக்கும் அதிக அளவு நீரை, சிறுநீர் மூலமாக வெளியேற்றும் சக்தி கொண்டது இந்த பெரும் சீரகம்.

உடலை பலவித நச்சுக்களின் பாதிப்பிலிருந்து நீக்கும் வேலையை, நமது கல்லீரல் தொடர்ந்து செய்து வருகின்றது. தினசரி ஒருமுறையேனும் சிறிதளவு பெருஞ்சீரகத்தினை நன்கு மென்று சாப்பிட்டு வர கல்லீரல் பலம் பெரும். அதில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் முழுமையாக நீங்கி, கல்லீரல் மற்றும் கணையம் போன்றவை தூய்மையாகும். கல்லீரல் தோற்று ஏற்படுவதை தடுக்கும்.

மாதவிடாய் காலத்தில் பெருஞ்சீரகத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் பெண்களின் ஈஸ்டோஜன் ஹார்மோன்கள் நன்கு தூண்டப்பெற்று மாத கால வலி மற்றும் இதர குறைபாடுகளை நிவர்த்தி செய்கின்றது.

இரைப்பை பிரச்சனை, மாதவிடாய்க்கோளாறு, செரிமானக் கோளாறுகள், வயிற்றில் உள்ள ஒட்டுண்ணி பிரச்சனை, பெருங்குடல் கோளாறுகள் உள்ளிட்ட இன்னும் பலவற்றுக்கு பெருஞ்சீரக டீ நன்மை தர கூடியது.

பெருஞ்சீரகம் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. அசைவ உணவுகள் சாப்பிட்ட பின் சிலருக்கு உள்ள உடல்நல குறைபாடுகளால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.

நரம்புகள் பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கும் ஆழ்ந்த தூக்கம் ஏற்படுவதில் பிரச்சனை உண்டாகிறது. பெருஞ்சீரகத்தில் மெக்னீசியம் சத்து அதிகம் நிரம்பி உள்ளது. இது நரம்புகளை வலுவாக்கி, ஆழ்ந்த தூக்கம் ஏற்பட செய்கிறது. ஒரு சிலருக்கு இருக்கும் தூக்கத்தில் நடக்கும் வியாதியையும் பெருஞ்சீரகம் குணப்படுத்துகிறது.