வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

தினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...!

பேரீச்சம் பழத்தில், கால்சியம், சல்ஃபர், இரும்பு, பொட்டாசியம்,  பாஸ்பரஸ், காப்பர் மற்றும் மக்னீசியம் போன்ற கனிமங்கள் நிறைந்துள்ளது. பேரீச்சம் பழம், ரத்தசோகையை போக்கும். முடி உதிர்வை தடுக்கும்.
மலச்சிக்கலைச் சரிசெய்ய, முதல்நாள் இரவே மூன்று பேரீச்சையை நீரில் ஊறவைக்க வேண்டும். காலையில் அவற்றின் சாற்றைக் குடிக்கலாம். பேரீச்சையில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது; கரையக்கூடியது. இது செரிமான மண்டலப் பாதையில் உள்ள நீரை வெளியேற்ற உதவுகிறது. குடல் இயக்கங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. வயிற்றுப்போக்குக்குச் சிறந்த மருந்தாகும் இது செரிமானச் சக்தியை அதிகரிக்கும்.
 
தினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதன் மூலம் குடல் இயக்கங்கள் ஆரோக்கியமாக இருக்கும். மலச்சிக்கல் நீங்கும். இது எலும்புகளின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் துணை புரிகிறது. எலும்பு தேய்மானத்தால் பெரிதும் அவதிப்படுபவர்கள் இதை சாப்பிடுவது நல்லது.
 
பேரீச்சையில் நிறைந்துள்ள அதிக அளவிலான இரும்புச்சத்து, ரத்தச்சோகையை சரிசெய்கிறது. உடலுக்குத் தேவையான எனர்ஜி மற்றும் ஆரோக்கியத்தைத்  தரும். ரத்த உற்பத்திக்கு வழிவகுக்கிறது. ரத்தம் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது.
 
பேரீச்சையில் இருக்கும் நிகோட்டின் அளவு, குடலில் இருக்கும் நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்து, குடல் கோளாறுகளில் இருந்து பாதுகாக்கிறது.
 
உடலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் பருவகால ஒவ்வாமைகளுக்கு சிறந்த தீர்வாகவும் இது இருக்கிறது. நரம்பு  மண்டலத்தின் ஆரோக்கியத்தையும் செயல்பாட்டையும் அதிகரிக்க செய்கிறது.