Daily Horoscope
✕

தினமும் காலையில் ஆயில் புல்லிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!!

Updated: புதன், 15 மே 2019 (16:56 IST)
 
நாளொன்றுக்கு மூன்று முறை, விடியற்காலையில் ஆயில் புல்லிங் செய்வதே சிறந்தது. சைனஸ்/ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்தால், இந்த பிரச்சனைகள் குணமாகும்.
 
எண்ணெயை கொப்பளிக்க முடிந்த எவரும், எந்த வயதினரும் இதனை செய்யலாம். இதற்கு எந்த வித பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ கிடையாது. எதாவது நோய்க்காக மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தாலும் கவலை இல்லை. நீங்கள் அந்த மாத்திரைகளை தொடர்ந்து  உட்கொள்ளலாம். நோயின் தன்மை குறைந்தால், மருந்தின் அளவையும் மருத்துவரின் ஆலோசனையோடு குறைத்துக் கொள்ளலாம்.
ஆயில் புல்லிங் செய்யும் போது ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால், உடனே வேறு நிறுவனத்தின் எண்ணெய்க்கு மாற்றிவிடலாம். விரைவில் நிவாரணம் வேண்டுவோர், நாளொன்றுக்கு மூன்று முறை செய்யலாம்.
 
ஆயில் புல்லிங் செய்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, சருமம் பொலிவோடு இருக்க உதவும். இந்த மருத்துவத்தை செய்ய  ஆரம்பித்ததும், சிலருக்கு, நோயின் தன்மை சற்று அதிகரித்து பின்னர் குறைகிறது. இது, நெடுநாளாய் வாட்டும் நோய் குணமாகப் போகிறது  என்பதின் அறிகுறி. 
 
ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்பட்டால், ஆயில் புல்லிங் செய்தால், இரத்தக்கசிவு ஏற்படுவது தடுக்கப்பட்டு, ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும்.
 
தினமும் காலையில் ஆயில் புல்லிங் செய்து வந்தால், வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேறி, வாய் துர்நாற்றம் அடிக்காமல்  இருக்கும்.
 

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments