வியாழன், 19 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (13:24 IST)

கோடைக்கால கரும்புள்ளிகளை போக்க எளிதான அழகு குறிப்புகள்!

Black spot
கோடைக்காலம் வந்தாலே சரும பிரச்சினைகளும் உண்டாகி பெரும் சோதனைக்கு உள்ளாக்குகின்றன. ஆனால் வீட்டில் உள்ள மருத்துவகுணம் கொண்ட பொருட்களை கொண்டே சரும பிரச்சினையை தடுக்க முடியும்.



கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது, இதனால் வெயிலில் பல இடங்களுக்கும் அலைய வேண்டியிருப்பவர்களுக்கு கரும்புள்ளிகள் உள்ளிட்ட சரும பிரச்சினைகள் தோன்றும் வாய்ப்புகள் உள்ளது.

அவ்வாறு கரும்புள்ளிகள் தோன்றினால் கீழ்கண்ட குறிப்புகளை பின்பற்றி கரும்புள்ளிகளை போக்கி சருமத்தை அழகாக பராமரிக்க முடியும்.

எலுமிச்சை சாறுடன் ரோஸ் வாட்டர் கலந்து காட்டன் துணியில் நனைத்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 5 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி வர கரும்புள்ளிகள் மறைந்து சருமம் பொலிவடையும்.

பப்பாளி பழத்தை தோல், விதை நீக்கி மசித்துவிட்டு அதனுடன் தேன் கலந்து குழைத்து முகத்தில் பூசி வர கரும்புள்ளிகள் மறைவதோடு முக அழுக்குகள் நீங்கி பொலிவு தரும்.

கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் ஜாதிக்காயை அரைத்து குழைத்து வைத்து வர ஒரு வாரத்தில் கரும்புள்ளிகள் மறைய தொடங்கும்.

முகத்தில் வெண்ணெய் தடவி, வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து ஆவி பிடித்து முகத்தை கழுவி வர முகச்சுருக்கங்கள், கரும்புள்ளிகள் மறையும்.

Edit by Prasanth.K