புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

எளிதாக கிடைக்கக் கூடிய கொய்யா பழத்தில் உள்ள சத்துக்கள்....!

கொய்யா மிகவும் எளிதில் கிடைக்கக் கூடியதும், விலை மலிவானதும் கூட. பழங்களில் மிகவும் முக்கியமான ஒன்று.
கொய்யா பழத்தில் வைட்டமின் சி, லைக்கோபீனே மற்றும் தோலிற்கு நன்மை பயக்கும் ஆண்டிஆக்ஸிடண்ட் அதிக அளவில் கொண்டுள்ளது. மேலும் நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்சுவதற்கும் பயன்படும் மெக்னீசியமும் கொய்யாவில் நிறைந்துள்ளது.
 
கொய்யாப் பழம் கருவுறுதலை மேம்படுத்தும் ஃபோலேட் எனப்படும் கனிமச்சத்தினையும் கொண்டுள்ளது. கொய்யா பழத்தில் வைட்டமின் ‘ஏ’  இருப்பதால் ஆரோக்கியமான பார்வைத் திறனை மேம்படுத்தும்.
புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கிறது. கொய்யாப் பழம் சாப்பிடுவதனால் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் குறைவதாகக்  கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
 
கொய்யாப் பழத்தில் வைட்டமின் ‘பி 9’ மற்றும் போலிக் அமிலம் உள்ளது. இவை கர்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் இவை குழந்தையின் நரம்பு மண்டலத்தை வளர்பதோடு, நரம்பியல் கோளாறுகளிலிருந்து குழந்தையைப்  பாதுகாக்கிறது.
 
ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற மற்றா பழங்களுடன் கொய்யாப் பழத்தை ஒப்பிடும் போது கொய்யாவில் அதுவும் முழுக் கொய்யாப் பழத்தில் குறைந்த அளவு சர்க்கரையே உள்ளது.
 
கொய்யாப் பழங்களில் அதிக அளவில் சுருக்கங்களைக் கட்டுபடுத்தும் குணங்கள் உள்ளன. அதிலும் குறிப்பாகக் கொய்யா இலைகள் மற்றும் பழுக்காத கொய்யாக் காய்களில் அதிக அளவில் இப்பண்புகள் உள்ளன.
 
இரத்தத்தில் உள்ள கொழுப்பினை கொய்யாப் பழம் குறைக்கிறது. இரத்தம் கடினமாவதைத் தடுத்து இரத்தத்தின் திரவத் தன்மையைப் பாதுகாக்கிறது. இதன் மூலம் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.