Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல வியாதிகளுக்கும் மருத்தாகிறதா வில்வம்...?

Written By Sasikala
Published: வியாழன், 13 அக்டோபர் 2022 (17:19 IST)
வில்வப்பழம் பல வியாதிகளுக்கும் ஒரு சிறந்த மருத்தாகும். வில்வப்பழம் இதயத்திற்கு வலு சேர்க்கிறது. வில்வப் பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். வில்வப்பழம் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.


உலரவைத்த வில்வப்பழம் ஒரு 5 கிராம் அளவுள்ள ஒரு துண்டை எடுத்துக் கஷாயம் போட்டுக் காலை, மாலை இரண்டு வேளைகள் குடித்தால் சீதபேதி குணமாகும். அத்துடன் உடல் உள்ளுறுப்புகளும் சக்தி அடையும்.

வில்வ இலை மலத்தைக் கட்டுப்படுத்தும். வயிற்று வலியைப் போக்கும். எல்லாவிதமான மேக நோய்க்கும் வில்வம் அரும் மருந்தாக உள்ளது. எல்லா விதமான காய்ச்சலையும் போக்கும் தன்மை கொண்டது. வில்வப் பழம் பித்த சம்மந்தமான நோய்களுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது.

மேலும் படிக்க:பித்த சம்மந்தமான நோய்களுக்கு நல்ல மருந்தாகும் வில்வம் !!

வில்வப் பழம் நெஞ்சு வலியைப் போக்கும். வாய்புண், குடல் புண் போன்ற நோய்களையும் தீர்க்க வல்லது காசநோயை குணமாக்கும். சளி, தடிமன், மூக்கடைப்பு, கண் எரிச்சல் போன்றவற்றையும் குணமாக்கும்.

வில்வ பழத்தைச் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும். சிறுநீர் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கும். தாய்மார்களுக்கு தாய்ப்பாலை பெருக்கும். மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனைகளை குணமாக்கும். சிறுநீரக கற்களைக் கரைக்கும். இதை ஊறுகாய் போல போட்டுச் சாப்பிட்டால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

Edited by Sasikala

எல்லாம் காட்டு

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments